முகப்பு
இந்தியா

கேரளாவில் கன மழையின் காரணமாக உயிர் இழந்தோரின் எண்ணிக்கை 324 ஆக உயர்வு

கேரளாவில் கன மழையின் காரணமாக உயிர் இழந்தோரின் எண்ணிக்கை 324 ஆக உயர்ந்துள்ளதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 4:31 PM
பகிர்:

திருவனந்தபுரம்: கேரளாவில் கன மழையின் காரணமாக உயிர் இழந்தோரின் எண்ணிக்கை 324 ஆக உயர்ந்துள்ளதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கேரள மாநில முதல்வர் அலுவலக அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த 100 வருடங்களில் இல்லாத மிக மோசமான வெள்ளத்தை கேரளா எதிர்கொண்டுள்ளது. 80 அணைகள் திறக்கப்பட்டுள்ளன. 1500 -க்கும் மேற்பட்ட நிவாரண முகாம்களில் 223139 பேர் தங்க வைக்கப்பட்டுளள்னர். பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையினை மறு உருவாக்கம் செய்ய உங்களது உதவிகள் துணை புரியும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

முழு கட்டுரையைப் படிக்க →