முகப்பு
இந்தியா

ஜம்மு பேருந்து நிலையத்தில் குண்டு வெடிப்பு; யாருக்கும் காயமில்லை

ஜம்மு பேருந்து நிலையத்தில் இன்று சக்திக் குறைந்த வெடிபொருள் வெடித்ததில் பதற்றம் நிலவுகிறது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

Updated On : 30 ஜனவரி, 2024 at 6:00 PM
பகிர்:


ஜம்மு: ஜம்மு பேருந்து நிலையத்தில் இன்று சக்திக் குறைந்த வெடிபொருள் வெடித்ததில் பதற்றம் நிலவுகிறது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

நள்ளிரவில் இந்த வெடிபொருள் வெடித்ததால், யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்று காவல்துறை கூறுகிறது.

பேருந்து நிலையத்தின் அருகே காவல்நிலையத்தின் நுழைவு வாயில் அமைந்துள்ளது. எனவே காவல்நிலையத்தைக் குறி வைத்து இந்த குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டிருக்கலாம் என்றும், ஓடும் வாகனத்தில் இருந்து காவல்நிலையம் நோக்கி வெடிபொருளை வீசும் போது இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.