இந்தியா

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியைச் சந்தித்த கனடா பிரதமர்! 

DIN

புதுதில்லி: இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள கனடா நாட்டுப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தில்லியில் இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்துப் பேசினார்.

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது குடும்பத்தினருடன் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். கடந்த சனிக்கிழமை தில்லி வந்த அவர் தாஜ்மஹாலுக்கு குடும்பத்தினருடன் சென்று சுற்றிப்பார்த்தார். அதன்பின், குஜராத் சென்ற அவர் காந்தி ஆசிரமத்திற்கு சென்று பார்வையிட்டார். அதைத்தொடர்ந்து பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் நகரில் உள்ள பொற்கோவிலுக்கு குடும்பத்தினருடன் சென்று வழிபட்டார்.

இந்த பயணத்தை முடித்துக் கொண்டு அவர் வியாழனன்று தில்லி திரும்பினார். பின்னர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். வெள்ளியன்று காலை ஜனாதிபதி மாளிகைக்கு வந்த  ஜஸ்டின் ட்ரூடோவை பிரதமர் மோடி கட்டிப்பிடித்து வரவேற்றார்.

இந்நிலையில் தில்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை ஜஸ்டின் ட்ரூடோ சந்தித்து பேசினார்.  அப்போது சோனியா காந்தியின் உடல்நலம் குறித்து ராகுலிடம் அவர் விசாரித்தாகத் தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள்...

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

அணிவகுத்து நின்ற வாகனங்கள்...

வருங்கால வைப்பு நிதி குறை தீா்க்கும் முகாம்

மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

SCROLL FOR NEXT