இந்தியா

சாணக்கிய நீதி, அர்தசாஸ்திர முறையில் இந்திய ராணுவம் புத்துயிர் பெற வேண்டும்: தளபதி சூளுரை 

Raghavendran

இந்தியா ராணுவத்தின் தொழில்நுட்ப கூட்டமைப்பு தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் பேசியதாவது:

இந்திய ராணுவம் மட்டுமல்லாமல் குறிப்பாக பாதுகாப்புத் துறை புத்துயிர் பெற வேண்டும். இனி வரும் காலகட்டங்களில் நடைபெறும் யுத்தங்களை சமாளிக்கும் திறன் பெருக வேண்டும். அதற்கேற்ப நாம் முன்கூட்டியே தயார் நிலையில் இருப்பது அவசியமாகும். 

எதிர்காலத்தில் நாட்டின் பாதுகாப்பு தொடர்பாக எத்தகைய இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டாலும் அதனை திறம்பட எதிர்கொண்டு முறியடிக்க வேண்டும். அதற்கான நேரம் நெருங்கிவிட்டது. அதன் முதல்படியை நாம் எடுத்துவைத்துள்ளோம். இது இப்படியே தொடர்ந்து மேம்பட வேண்டும்.

இவ்வகையில் தற்போது இலகுவான புல்லட் ஃப்ரூப் உடைகள் தயார்படுத்தப்பட்டுள்ளது பாராட்டுதலுக்குரியது. இதுபோன்று தொடர்ந்து ஊக்கமளிக்கும் வகையில் செயல்பட்டால், ராணுவ வீரர்கள் தங்கள் திறனை மேலும் வளர்த்துக்கொண்டு இன்னும் அதிக உற்சாகத்துடன் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவர். 

இதுபோன்ற நவீன ரக தொழில்நுட்பங்கள் பெருகும் போது, அது சரிவர பயன்படுத்தப்பட வேண்டும். அதுவே இன்றைய தேவையாகவும் அமைகிறது. இனி வரும் காலகட்டங்களில் அனைத்து தேவைகளுக்கும் இந்தியாவிலேயே பூர்த்தியாகும்படி அமைவது அவசியமாகும்.

இந்தியாவின் பாதுகாப்புத்துறையில் அந்நிய நாடுகளை நம்பாமல் நமது சாணக்கிய நீதி மற்றும் அர்தசாஸ்திரம் உள்ளிட்ட முறைகளிலான கட்டமைப்பு உருவாக்குவது சிறப்பானதாக அமையும். 

போருக்கு எப்போது தயாராக இருக்க வேண்டும். அதே சமயம் அது நமது நாட்டில் தயார் செய்யப்பட்ட பாதுகாப்பு அமைப்புகளில் எதிர்கொள்ளும் வகையில் அமைந்திட வேண்டும். நமக்கான தீர்வை நாம்தான் பூர்த்தி செய்துகொள்ள வேண்டும் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளம்பருவத்தினர் இணையவழி குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவை -தலைமை நீதிபதி

'ஜெயக்குமார் தனசிங் காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்'

அரண்மனை - 4 முதல்நாள் வசூல்!

‘டாக்ஸிக்’ படத்தில் கரீனாவுக்கு பதிலாக நயன்தாரா?

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி மும்பை வீரர் சாதனை!

SCROLL FOR NEXT