இந்தியா

ஆதார் இல்லாததால் அனுமதியில்லை: மருத்துவமனை வாசலில் பெண்ணுக்குப் பிரசவம்! 

DIN

ஜான்பூர்: ஆதார் அட்டைமற்றும் வங்கிக் கணக்கு இல்லாத காரணத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படாமல்,  கர்ப்பிணி பெண் ஒருவருக்கு மருத்துவமனை வாசலிலேயே பிரசவம் நடந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் ஜான்பூர் மாவட்டத் தலைநகரத்தில் உள்ள மருத்துவ நிலையத்தில் கடந்த 29-ஆம் தேதி இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது குறித்து குறிப்பிட்ட பெண்ணின் கணவர் செய்தி நிறுவனம் ஒன்றிடம் தெரிவித்ததாவது:

எனது மனைவியின் பிரசவத்திற்காக நாங்கள் துணை மருத்துவ நிலையத்திற்குச் சென்றோம். அங்கிருந்த பெண் மருத்துவர் என் மனைவியை அனுமதிக்க முடியாது என்று திருப்பி அனுப்பி விட்டார். அவர் கேட்ட  ஆதார் அட்டைமற்றும் வங்கிக் கணக்கு உள்ளிட்ட ஆவணங்கள் இல்லாத காரணத்தால் எனது மனைவியை அனுமதிக்க முடியாது என்று அவர் கூறினார்.  நாங்கள் அங்கிருந்து நகர்ந்து மருத்துவ நிலைய வாசலை அடைந்த பொழுது, எனது மனைவிக்கு பிரசவ வலி வந்து குழந்தையினைப் பெற்றெடுத்தாள்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். ஆனால் இவரது கூற்றினை குறிப்பிட்ட மருத்துவமனை கண்காணிப்பாளர் மறுத்திருக்கிறார். 

அந்த பெண் மருத்துவர் அந்த கர்ப்பிணி பெண்ணை மாவட்ட மருத்துவமனைக்கு பரிந்துரை செய்துள்ளார். அந்தப் பெண்ணும் வேறு ஒருவருடன் அங்கு செல்வதாக கூறி விட்டுச் சென்றுள்ளார்.  ஆனால் வாசலை அடைந்த பொழுது அவருக்குப் பிரசவ வலி வந்துள்ளது. உடனே அவர் உள்ளே அழைக்கப்பட்டு, அங்கு அவருக்கு பிரசவம் நிகழ்ந்துள்ளது. தற்பொழுது தாயும் சேயும் நலமாக உள்ளார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியீடு!

ஏப்ரலும் ஷ்ரத்தாவும்!

ஜாமீன் கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் சிசோடியா மனு தாக்கல்!

இந்தியன் - 2 வெளியீட்டுத் தேதி இதுதானா?

தமிழ்ப் படங்களின் பாணியில் சிஎஸ்கேவை கிண்டல் செய்யும் பஞ்சாப்!

SCROLL FOR NEXT