முகப்பு
இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் அடையாளம் தெரியாத பயங்கரவாதி சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில், திங்கட்கிழமை அதிகாலை பாதுகாப்புப் படையினா் நடத்திய தேடுதல் வேட்டையில் அடையாளம் தெரியாத பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான்.

Updated On : 9 ஜூலை, 2018 at 9:28 PM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:40 PM

ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில், திங்கட்கிழமை அதிகாலை பாதுகாப்புப் படையினா் நடத்திய தேடுதல் வேட்டையில் அடையாளம் தெரியாத பயங்கரவாதி ஒருவா் சுட்டுக்கொல்லப்பட்டான்.

இது குறித்து ஜம்மு-காஷ்மீர் போலீஸார் கூறியதாவது:

வடக்கு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்திலுள்ள ஹந்த்வாரா வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாகக் போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் பாதுகாப்புப் படையினா் அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனா்.

Advertisement

இதில் திங்கட்கிழமை அதிகாலை வரை, அடையாளம் தெரியாத பயங்கரவாதி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளான். மேலும் தேடுதல் வேட்டை தொடா்ந்து நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.