இந்தியா

ராகுலின் செயல் மகிழ்ச்சி அளிக்கிறது: ப்ரியா வாரியர்

நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் செய்த செயல் மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக நடிகை ப்ரியா வாரியர் தெரிவித்துள்ளார்.

DIN

நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் செய்த செயல் மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக நடிகை ப்ரியா வாரியர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவாதத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பின்னர் யாரும் எதிர்பாராத வகையில் பிரதமரின் இருக்கைக்கு சென்று அவரை கட்டித்தழுவினார்.

பின்னர், தனது இருக்கைக்கு திரும்பிய ராகுல், அருகில் இருந்த காங்கிரஸ் உறுப்பினர்களைப் பார்த்து அவர் கண் சிமிட்டினார். நாடாளுமன்றத்தில் அதிலும் குறிப்பாக நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான நடைமுறையின்போது பிரதமரை எதிர்க்கட்சித் தலைவர் கட்டித்தழுவியது இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது. 

இந்நிலையில், கண் சிமிட்டலுக்கு பெயர்போன நடிகை ப்ரியா வாரியர் இதுகுறித்து கூறுகையில்,

நான் கல்லூரியில் இருந்து வந்தவுடன் காங்கிரஸ் தலைவர் ராகுல், நாடாளுன்றத்தில் கண் சிமிட்டியதை கண்டு ரசித்தேன். அது மிகவும் அழகாக இருந்தது. நான் ஒரு திரைப்படத்தில் அதைச் செய்த பிறகு எனக்கு சொந்தமான அந்த செய்கையை ராகுல் செய்திருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சிபு சோரன் காலமானார்

தங்கம் விலை நிலவரம்

தில்லியில் காங்கிரஸ் எம்.பி. சுதாவின் தங்கச் செயின் பறிப்பு

சவூதியில் 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றம்!

போரை நிறுத்தினேன்! உலகில் ஐந்து போர்களை நிறுத்தியதாக டிரம்ப் பெருமிதம்!

SCROLL FOR NEXT