இந்தியா

வரும் மக்களவைத் தேர்தலில் தில்லியில் ஆம் ஆத்மியுடன் கூட்டணி கிடையாது: காங்கிரஸ்

வரும் மக்களவைத் தேர்தலில் தில்லியில் ஆம் ஆத்மியுடன் கூட்டணி கிடையாது என்று தில்லி மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் மேக்கன் தெரிவித்துள்ளார்.

ENS

புதுதில்லி: வரும் மக்களவைத் தேர்தலில் தில்லியில் ஆம் ஆத்மியுடன் கூட்டணி கிடையாது என்று தில்லி மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் மேக்கன் தெரிவித்துள்ளார்.

வருகின்ற 2019-ஆம் ஆண்டு நடக்க உள்ள மக்களவைத் தேர்தலில் பாஜவுக்கு எதிராக 'மோடி எதிர்ப்பு'  கூட்டணியினை உருவாக்குவதில் காங்கிரஸ் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதற்காக பல்வேறு கட்சிகளிடம் பேசிவருகிறது.  

தில்லியில் இதுதொடர்பாக நமது செய்தியாளரிடம் பேசிய தில்லி மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் மேக்கன் தெரிவித்ததாவது:

ஆம் ஆத்மி கட்சியுடன் எந்த விதமான கூட்டணியும் வைத்துக் கொள்வதில்லை என்று காங்கிரஸ் முடிவு  செய்துள்ளது. அதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளது. முதலாவதாக அந்த கட்சி மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒன்றாக உள்ளது. இரண்டாவதாக அவர்கள்தான் ஆர் எஸ் எஸ் மற்றும் சமூக சேவகர் அன்னா ஹசாரேவுடன் இணைந்து செயல்பட்டு மத்தியில் மோடி ஆட்சிக்கு வர வழி வகுத்தனர்  எனபது மற்றொரு முக்கிய காரணம். 

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிராம நிா்வாக அலுவலா்கள் காத்திருப்பு போராட்டம்

அமைதிப் பேச்சுவார்த்தை: உக்ரைனுக்கு ரஷியா அழைப்பு!

தொழிற்சங்கங்களால் நாட்டின் வளர்ச்சி பாதிப்பு..! -உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி

தொடரும் காஷ்மீர் வணிகர்கள் மீதான வன்முறைகள்! உத்தரகண்டில் கும்பல் தாக்குதலில் 17 வயது சிறுவன் படுகாயம்!

அமெரிக்க தூதருடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு!

SCROLL FOR NEXT