இந்தியா

ஐந்து ஆண்டுகள்...23 ஆயிரம் வழக்குகள்...ரூ.1 லட்சம் கோடி 'ஸ்வாஹா': அதிர வைக்கும் வங்கி ஊழல் டேட்டா 

கவியழகன்

புதுதில்லி: இந்தியாவில் கடந்த ஐந்து ஆண்டுகளில் பல்வேறு வங்கிகளில் நடைபெற்ற ஊழல்கள் தொடர்பாக 23 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும்,  அதன் மூலம் ரூ.1 லட்சம் கோடி பணம் முறைகேடு செய்யப்பட்டுள்ளதாகவும் ஆர்.பி.ஐ தெரிவித்துள்ளது.  

இந்தியாவில் கடந்த ஐந்து ஆண்டுகளில் பல்வேறு வங்கிகளில் நடைபெற்ற பண முறைகேடுகள் மற்றும் ஊழல்கள் தொடர்பாக தகவல்களை தெரிவிக்கக் கோரி. ஆர்.பி.ஐயிடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு ஆர்.பி.ஐ அளித்துள்ள பதில் மூலமாகத்தான் இந்த தகவல் தெரிய வந்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்தியாவில் ஏப்ரல் 2017 முதல் மார்ச் 1, 2018 வரையிலான காலகட்டத்தில் பல்வேறு வங்கிகளில் நடைபெற்ற ஊழல்கள் தொடர்பாக 5152 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளின் மூலமாக  ரூ.28459 கோடி வங்கிப் பணம் முறைகேடு செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இது மிகவும் அதிகபட்ச அளவாகும்.

இதற்கு முந்தைய ஆண்டான 2016-17 இல் மொத்தமாக 5076 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளின் மூலமாக  ரூ.23933 கோடி வங்கிப் பணம் முறைகேடு செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.  

சுருக்கமாக 2013 துவங்கி  மார்ச் 1, 2018 வரையிலான காலகட்டத்தில் பல்வேறு வங்கிகளில் நடைபெற்ற ஊழல்கள் தொடர்பாக 23866 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளின் மூலமாக  ரூ.1 லட்சம் கோடி வங்கிப் பணம் முறைகேடு செய்யப்பட்டுள்ள அதிர்ச்சிகரமான தகவல் தற்பொழுது தெரிய வந்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நடிகர் அஜித்துக்கு பிறந்தநாள் பரிசளித்த ஷாலினி!

டி20 உலகக் கோப்பை: ரஷித் கான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி!

சல்மான் கான் வீடருகே துப்பாக்கிச் சூடு: குற்றவாளி தற்கொலை முயற்சி

கொன்றைப் பூ..!

மோடி அரசியல் குடும்பத்தில் குற்றவாளிகளுக்கு பாதுகாப்பு உறுதி: ராகுல்

SCROLL FOR NEXT