பிஎன்பி வங்கி நிதி மோசடி: நீதிமன்றத்தில் சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல்
பிஎன்பி வங்கி நிதி மோசடி விவகாரத்தில் அந்த வங்கியின் முன்னாள் தலைவர் உள்ளிட்டோரை குற்றவாளிகளாக சி.பி.ஐ. திங்களன்று நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
புதுதில்லி: பிஎன்பி வங்கி நிதி மோசடி விவகாரத்தில் அந்த வங்கியின் முன்னாள் தலைவர் உள்ளிட்டோரை குற்றவாளிகளாக சி.பி.ஐ. திங்களன்று நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
பஞ்சாப் தேசிய வங்கியில் பிரபல வைர வியாபாரி நீரவ் மோடி மற்றும் அவரது உறவினரான மெஹுல் சோக்ஷி உள்ளிட்டோர் ரூ.16 ஆயிரம் கோடி அளவிற்கு நிதி முறைகேடு செய்துள்ளதாக சி.பி.ஐ.யிடம் அந்த வங்கி புகார் அளித்தது. அதன் அடிப்படையில் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் கடந்த 2015ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரை வங்கியின் மேலாண் இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக உஷா அனந்த சுப்ரமணியனிடம் சி.பி.ஐ. சமீபத்தில் விசாரணை நடத்தியது.
இந்நிலையில் பிஎன்பி வங்கி நிதி மோசடி விவகாரத்தில் அந்த வங்கியின் முன்னாள் தலைவர் உள்ளிட்டோரை குற்றவாளிகளாக சி.பி.ஐ. திங்களன்று நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
இந்த குற்றப்பத்திரிகையில் பஞ்சாப் தேசிய வங்கியின் செயல் இயக்குநர்கள் கே.வி. பிரம்மாஜி ராவ் மற்றும் சஞ்சீவ் சரண் மற்றும் பொது மேலாளர் (சர்வதேச நடவடிக்கைகள்) நேஹால் ஆஹாத் ஆகியோரது பெயர்களும் சேர்க்கப்பட்டு உள்ளன.
அத்துடன் இந்த பண மோசடியில் நீரவ் மோடி, அவரது சகோதரர் நிஷால் மோடி மற்றும் நீரவ் மோடி நிறுவனத்தின் செயல் அதிகாரி சுபாஷ் பரப் ஆகியோரது பங்கு பற்றியும் சி.பி.ஐ. தகவல் தெரிவித்து உள்ளது.
ஆயினும் வழக்கில் தொடர்புடைய மெகுல் சோக்ஷியின் பங்கு பற்றி முதன்மை குற்றப்பத்திரிகைகயில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.