போலி ஆதாரங்களுடன் இந்திய பாஸ்போர்ட்: ஹைதராபாத்தில் ரோஹிங்யாக்கள் இருவர் கைது
போலி ஆதாரங்களுடன் இந்திய பாஸ்போர்ட் பெற்ற ரோஹிங்யாக்கள் இருவர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹைதராபாத்தில் போலியான ஆதாரங்களை வழங்கி இந்திய பாஸ்போர்ட் பெற்ற ரோஹிங்யாக்கள் இருவர் உட்பட நான்கு பேர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹைதராபாத்தைச் சேர்ந்த பலபூர் போலீஸார் மேற்கொண்ட நடவடிக்கையில் சையது நயீம், முகமது அகீல், முகமது ஃபயாஸ் மற்றும் முகமது ஃபைஸல் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் முகமது ஃபயாஸ் மற்றும் முகமது ஃபைஸல் ஆகியோர் மியான்மரைச் சேர்ந்த ரோஹிங்யாக்கள் ஆவர். இவர்களுக்கு ஹைதராபாத்தைச் சேர்ந்த சையது நயீம் மற்றும் முகமது அகீல் ஆகியோர் போலியான ஆதார், பான் கார்டு உள்ளிட்ட அடையாள அட்டைகளை போலியாக தயாரித்து இந்திய பாஸ்போர்ட் பெற்றுத் தந்துள்ளனர்.
Advertisement
Advertisement
இதுதொடர்பாக ஹைதராபாத் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.