இந்தியா

ராஜ்தானி ரயில் மீது மர்ம நபர்கள் கல்வீச்சு; 6 பேர் காயம்

ராஜ்தானி விரைவு ரயில் மீது மர்ம நபர்களின் கல் வீச்சால் 6 பேர் காயமடைந்தனர்.

DIN

மேற்கு வங்க மாநிலம் சியல்டா நகரில் இருந்து நேற்று மாலை தில்லி நோக்கி ராஜ்தானி விரைவு ரயில் புறப்பட்டது. அந்த ரயில் பிஹார் மாநிலம் மான்பூர் சந்திப்பை வந்தடைந்த போது மர்ம நபர்கள் சிலர் ரயில் மீது கற்களை வீசி தாக்கினர். 

இதில், 6 பயணிகள் காயமடைந்தனர். ரயிலின் கண்ணாடிகளும் கல்வீச்சில் சேதமடைந்தன. பின்னர், சற்று நேரம் தாமதித்து புறப்பட்ட ரயில் கயா சந்திப்பு ரயில் நிலையத்தில் கண்ணாடிகளை மாற்றி தில்லிக்கு புறப்பட்டது. 

இந்த சம்பவம் பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. ரயில்வே காவல் துறையினர் இது குறித்து விசாரணை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

நீண்ட நாட்களாகவே தொடர்ந்து நிகழ்ந்து வரும் இந்த ரயில் மீதான கல்வீச்சு சம்பவம் இந்திய ரயில்வேவுக்கு தொடர்ந்து பிரச்னையாகவே இருந்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

45 வயதைக் கடந்த பெண் காவலா்களுக்கு இரவு நேரப் பணியில் இருந்து விலக்கு

இந்த நாள் இனிய நாள்!

பாலாற்றில் தோல் கழிவுநீா் கலப்பு விவகாரம் - உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி

ஆட்டோ கவிழ்ந்து சிறுவன் உயிரிழப்பு

பேச்சு தோல்வி: 6-ஆவது நாளாக நீடித்த தூய்மைப் பணியாளா்கள் போராட்டம்

SCROLL FOR NEXT