இந்தியா

மகாபாரத காலத்திலேயே இதழியல் துவங்கி விட்டது: உத்தரப் பிரதேச துணை முதல்வரின் 'கண்டுபிடிப்பு’

மகாபாரத காலத்திலேயே இதழியல் துவங்கி விட்டதாக நிகழ்வு ஒன்றில் உத்தரப் பிரதேச துணை முதல்வர் பேசியிருப்பது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

PTI

மதுரா: மகாபாரத காலத்திலேயே இதழியல் துவங்கி விட்டதாக நிகழ்வு ஒன்றில் உத்தரப் பிரதேச துணை முதல்வர் பேசியிருப்பது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

உத்தரப் பிரதேசம் மாநிலம் மதுராவில் 'ஹிந்தி இதழியல் தினம்' புதனன்று கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் உத்தரப் பிரதேச மாநில துணை முதல்வர் தினேஷ் ஷர்மா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்பொழுது மகாபாரத காலத்திலேயே இதழியல் துவங்கி விட்டதாக அவர் பேசியிருப்பது புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.     

நிகழ்வில் அவர் பேசியதாவது:

மகாபாரதத்தில் வரும் புராண கதாபாத்திரமான சஞ்சயன் ஹஸ்தினாபுர அரண்மனையில் அமர்ந்தபடியே, பார்வையற்ற மன்னர் திருதிராஷ்ட்ரனுக்கு, குருஷேத்ர போர் காட்சிகளை பறவைப் பார்வையில் எடுத்து உரைக்கிறான்.

இது நேரடி ஒளிபரப்பு இல்லை என்றால் வேறு என்ன?

உங்களது கூகுள் இப்பொழுதான் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. ஆனால் எங்களது கூகுள் வெகுகாலத்திற்கு முன்னமே செயல்படத் துவங்கி விட்டது. நாரதர் ஒரு தகவல் களஞ்சியம். அவர் 'நாரயணா என்று மூன்று முறை உச்சரிப்பதன் வாயிலாக, உலகின் எந்த இடத்திற்கும் விரைவில் செல்ல முடியும். அதே போல தகவல்களையும் பரிமாற முடியும்.

இவ்வாறு அவர் பேசினார். பாஜக தலைவர்கள் இவ்வாறு பேசி சர்ச்சையில் சிக்குவது என்பது சமீப காலங்களில் வாடிக்கையான சம்பவமாகியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.      

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓவல் டெஸ்ட்: யஷஸ்வி ஜெய்ஸ்வால் சதம் விளாசி அசத்தல்!

ஆகஸ்ட்டில் பொதுவிடுமுறை நாள்கள் அதிகம்: விமான கட்டணம் 80% வரை உயர்வு!

ஈரான் அதிபர் பாகிஸ்தான் சுற்றுப்பயணம்

உள்நாட்டு தயாரிப்புகளுக்கே இனி ஒவ்வொரு இந்தியரும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்! -மோடி

தேவா யாருன்னு தெரிஞ்சும் விளையாடறானுங்க... கூலி டிரைலர்!

SCROLL FOR NEXT