இந்தியா

2,500 கிலோ பட்டாசுகள் பறிமுதல், 15 பேர் கைது: தில்லி போலீஸ் தகவல்

தீபாவளிக்கு உச்ச நீதிமன்றம் விதித்துள்ள உத்தரவு காரணமாக புதுதில்லியில் இதுவரை 2508 கிலோ பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

DIN

தீபாவளிக்கு உச்ச நீதிமன்றம் விதித்துள்ள உத்தரவு காரணமாக புதுதில்லியில் இதுவரை 2508 கிலோ பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

தீபாவளி பண்டிகையன்று இரவு 8 முதல் இரவு 10 மணி வரை இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க உச்ச நீதிமன்றம் நேரம் நிர்ணயம் செய்து உத்தரவிட்டது. 

இந்நிலையில், அனுமதி மீறி வெடித்ததற்காக புதுதில்லியில் 18 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், நவம்பர் 1-ஆம் தேதி முதல் மேற்கு தில்லியில் இருந்து 1,688 கிலோ, வடக்கு தில்லியில் இருந்து 660 கிலோ, கிழக்கு தில்லியில் இருந்து 150 கிலோ மற்றும் தெற்கு தில்லியில் இருந்து 10 கிலோ என மொத்தம் 2,508 கிலோ பட்டாசுகள் திங்கள்கிழமை வரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தில்லி போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த ஆண்டு வாங்கிய பட்டாசுகளை தமன்சீப் குடும்பத்தினர் புதன்கிழமை இரவு தொடர்ந்தது வெடித்ததாக தீப் பந்து என்பவர் போலீஸில் புகார் அளித்துள்ளார். இதனால் விசாரணைக்குப் பின்னர் தமன்சீப் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில், தமிழக அரசு தீபாவளியன்று பட்டாசுகளை வெடிப்பதற்கு காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் அனுமதி வழங்கியுள்ளது. மேலும் விதிமீறி பட்டாசு வெடித்தால் 6 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்

பாதுகாப்பு நிலைமை மோசமடைவதால் ஈரானை விட்டு உடனடியாக வெளியேறுங்கள்: இந்தியா்களுக்கு தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்

பன்முகப் பரிமாணங்கள் கொண்டவர் மூதறிஞர் ராஜாஜி! குடியரசுத் தலைவர் திரெளபதி முா்மு புகழாரம்

பெரம்பலூா் மாவட்டத்தில் 5.55 லட்சம் வாக்காளா்கள்

இருவேறு விபத்துகளில் இருவா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT