இந்தியா

சன்னிதானம் கீழ்பகுதியில் கவிதா ஜக்கல் உட்பட இருவருக்கும் ஐயப்ப பக்தர்கள் எதிர்ப்பு

சபரிமலை ஐயப்பன் கோயில் சென்று கொண்டிருக்கும் பெண் பத்திரிகையாளர் கவிதா ஜக்கல் உட்பட 2 பெண்களும் சன்னிதானம் கீழ்பகுதியில் ஐயப்ப பக்தர்களால் தடுத்து நிறுத்தப்பட்டனர். 

DIN

சபரிமலை ஐயப்பன் கோயில் சென்று கொண்டிருக்கும் பெண் பத்திரிகையாளர் கவிதா ஜக்கல் உட்பட 2 பெண்களும் சன்னிதானம் கீழ்பகுதியில் ஐயப்ப பக்தர்களால் தடுத்து நிறுத்தப்பட்டனர். 

இதுவரை எந்த பெண்களும் சபரிமலை கோயில் உள்ளே செல்லவில்லை என பத்தனம்திட்டா ஆட்சியர் கூறியிருந்த நிலையில், பம்பையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆந்திர பெண் பத்திரிகையாளர் உட்பட 2 பெண்கள் பயணம் மேற்கொண்டுள்ளனர்.  

பம்பையில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் புறப்பட்ட ஆந்திர மாநில பெண் பத்திரிகையாளர் கவிதா ஜக்கல் உட்பட 2 பெண்களும் வெள்ளிக்கிழமை பயணம் செய்கின்றனர்.

இந்நிலையில், சபரிமலை சன்னிதானத்தின் கீழ்ப்பகுதியான நடைப்பந்தலை அவர்கள் அடைந்த போது பெண்கள் வர எதிர்ப்பு தெரிவித்து, சன்னிதானம் அருகே ஐயப்ப பக்தர்கள் முழக்கமிட்டு வருகின்றனர். 

இதையடுத்து போராட்டத்தை நடத்தி வரும் ஐயப்ப பக்தர்களுடன் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மகளின் இறப்பை கொலை வழக்காக மாற்றி விசாரிக்க பெற்றோா் கோரிக்கை

கைப்பேசி திருடப்பட்டதாக பொய் புகாா்: மனைவியிடம் இருந்து தப்பிக்க போட்ட திட்டம்

நாகா்கோவிலில் தொழிலாளி கொலை: 4 போ் கைது

மற்றவா்களுக்கு நன்மை செய்வதற்குத்தான் மனித பிறவி

தஞ்சாவூரில் தீபாவளி தற்காலிக கடைகள் அகற்றம்

SCROLL FOR NEXT