இந்தியா

ரிசர்வ் வங்கியின் சுதந்திரத்தில் தலையிடும் அரசு: துணை ஆளுநர் ஆச்சார்யா கருத்தால் அரசு அதிருப்தி 

ரிசர்வ் வங்கியின் சுதந்திரத்தில் அரசு தலையிடுவதாக அதன் துணை ஆளுநர் ஆச்சார்யா தெரிவித்துள்ள கருத்தால் மத்திய அரசு அதிருப்தியடைந்துள்ளது. 

DIN

புது தில்லி: ரிசர்வ் வங்கியின் சுதந்திரத்தில் அரசு தலையிடுவதாக அதன் துணை ஆளுநர் ஆச்சார்யா தெரிவித்துள்ள கருத்தால் மத்திய அரசு அதிருப்தியடைந்துள்ளது. 

தில்லியில் கடந்த வாரம் நடைபெற்ற தொழிலதிபர்கள் பங்கேற்ற கூட்டம் ஒன்றில் பேசிய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் ஆச்சார்யா, ரிசர்வ் வங்கியின் சுதந்திரத்தில் அரசு தலையிடுவது பொருளாதாரப் பேரழிவுக்கு வித்திடும் எனத் தெரிவித்தார். 

விரைவில் நடைபெறவுள்ள ஐந்து மாநிலச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டுக் கடன் வழங்குவதற்கான கட்டுப்பாடுகளைத் தளர்த்திச் செயல்படுமாறு மத்திய அரசு ரிசர்வ் வங்கிக்கு அறிவுறுத்திஇருந்தது. இதை மனத்தில் வைத்தே ஆச்சார்யா இவ்வாறு பேசியதாகக் கூறப்படுகிறது. 

மத்திய அரசுடனான கருத்து வேறுபாட்டை ரிசர்வ் வங்கித் துணை ஆளுநர் இவ்வாறு வெளிப்படையாகப் பேசியது அதிருப்தி அளிப்பதாக மத்திய அரசு  வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு நிறைவு: ஆந்திர முதல்வர், துணை முதல்வர் வாழ்த்து!

மதுரை தல்லாகுளம் பெருமாள் கோவில் திருத்தேர் வைபவம்!

முதல் டெஸ்ட்: கே.எல்.ராகுல் அரைசதம்; வலுவான நிலையில் இந்தியா!

மகாநதி தொடரின் ஒளிபரப்பு நேரம் மீண்டும் மாற்றம்!

பாகிஸ்தான் வீரர்களிடம் போதிய திறமை இல்லை! - இந்திய முன்னாள் கேப்டன்

SCROLL FOR NEXT