இந்தியா

தனது எல்லைகளைத் தாண்டிச் செல்லும் பாஜக அரசு: காய்ச்சி எடுத்த மன்மோகன் 

மத்திய பாரதிய ஜனதா அரசு தனது எல்லைகளைத் தாண்டிச் சென்று கொண்டிருக்கிறது என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடுமையாக விமர்சித்துள்ளார்.

ANI

புது தில்லி: மத்திய பாரதிய ஜனதா அரசு தனது எல்லைகளைத் தாண்டிச் சென்று கொண்டிருக்கிறது என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடுமையாக விமர்சித்துள்ளார்.

தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் சார்பில் திங்களன்று 'பாரத் பந்த்' நடத்தப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக தில்லி ராம்லீலா மைதானத்தில் நடந்த கூட்டத்தில் பல்வேறு காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொண்டனர். அப்போது காங்கிரஸ் தலைவரும் முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங் பேசியதாவது:

நமது தேசத்தின் நலனுக்கு விரோதமான பல்வேறு விஷயங்களை மோடி அரசு செய்திருக்கிறது. அவர்கள் தங்களது எல்லைகளை மீறிச் செயல்படுகின்றனர். இந்த அரசை மாற்ற வேண்டிய நேரம் விரைவில் வரும்.

விவசாயிகள் முதல் சிறு வியாபாரிகள் வரை  பலரும் இன்று கவலையில் ஆழ்ந்துள்ளார்கள். போதுமான வேலை வாய்ப்புகள் இல்லாததால் இளைஞர்களும் கவலையில் ஆழ்ந்துள்ளார்கள்.

மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இந்த அரசு முழுமையாகத் தோல்வியடைந்து விட்டது. தங்களது பழைய வேறுபாடுகளை மறந்து அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைவதே இப்போதைய தேவையாகு ம். நாட்டின் ஒற்றுமையைக் காக்க நாம் தயாராக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருட்டு முயற்சியால் சிக்னல் கேபிள்கள் சேதம்! தில்லி விமான நிலைய எக்ஸ்பிரஸ் வழித்தடத்தில் ரயில்களின் வேகம் குறைகிறது: டிஎம்ஆா்சி

தமிழகத்துக்கு சுற்றுலா வந்தபோது உயிரிழந்த வடமாநில முதியவா் சடலம் எரிப்பு

கே.எஸ். அழகிரியின் மனைவி ஏ.வத்சலா காலமானார்!

செங்கம் பெருமாள் கோயிலில் கூடாரவல்லி தரிசனம்

‘மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்ட பணிகள் நிறுத்தம் இல்லை’

SCROLL FOR NEXT