முகப்பு
இந்தியா

தனியார் நிறுவனங்கள் ஆதார் எண்ணைப் பெறும் அதிகாரம் நீக்கம்: காங்கிரஸ் வரவேற்பு

தனியார் நிறுவனங்கள் ஆதார் எண்ணைப் பெறும் அதிகாரம் அளிக்கும் சட்டப் பிரிவு 57ஐ நீக்கி உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு காங்கிரஸ் கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது.

Updated On : 26 செப்டம்பர், 2018 at 12:42 PM
பகிர்:


புது தில்லி: தனியார் நிறுவனங்கள் ஆதார் எண்ணைப் பெறும் அதிகாரம் அளிக்கும் சட்டப் பிரிவு 57ஐ நீக்கி உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு காங்கிரஸ் கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது.

ஆதார் சட்டத்தில் 57வது பிரிவை நீக்கியதை நாங்கள் வரவேற்கிறோம். ஆதார் எண்ணை கையாளும் அதிகாரத்தை தனியார் நிறுவனங்களுக்கு வழங்கக் கூடாது என்று காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

அரசியல் சாசன அமர்வின்படி ஆதார் செல்லும் என்று தீர்ப்பளித்துள்ள உச்ச நீதிமன்றம், அதில் சில திருத்தங்களை மேற்கொண்டிருப்பது வரவேற்கத்தக்கதாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

வங்கிச் சேவை, செல்போன் சேவை, பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை உள்ளிட்டவற்றுக்கு ஆதார் கட்டாயமில்லை என்றும் உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாகக் கூறியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.