முகப்பு
இந்தியா

எல்லையில் தாக்குதலை நிறுத்த வேண்டும்: இந்தியாவிடம் பாகிஸ்தான் வேண்டுகோள்

சர்வதேச எல்லைப் பகுதியில் தாக்குதல் நடத்துவதை நிறுத்த வேண்டும் என்று இந்திய எல்லைப் பாதுகாப்பு படையிடம் பாகிஸ்தான் ராணுவம் கேட்டுக் கொண்டுள்ளது.

Updated On : 20 மே 2018, 11:55 pm IST
பகிர்:

சர்வதேச எல்லைப் பகுதியில் தாக்குதல் நடத்துவதை நிறுத்த வேண்டும் என்று இந்திய எல்லைப் பாதுகாப்பு படையிடம் பாகிஸ்தான் ராணுவம் கேட்டுக் கொண்டுள்ளது.
இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் தங்களது வீரர் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் பாகிஸ்தான் ராணுவம் கூறியுள்ளது.
இதுகுறித்து இந்திய எல்லைப் பாதுகாப்பு படையின் செய்தித்தொடர்பாளர், ஜம்முவில் ஞாயிற்றுக்கிழமை பேசியபோது, பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் இந்திய ராணுவத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கோரிக்கை விடுத்ததாகத் தெரிவித்தார். பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி நடத்தி வரும் துப்பாக்கிச்சூடு மற்றும் கொத்துக்குண்டு தாக்குதலுக்கு இந்தியாவின் தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டதாலேயே, சண்டை நிறுத்தம் வேண்டும் என அந்நாட்டு ராணுவம் கோரிக்கை விடுத்துள்ளதாக இந்திய ராணுவத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.
கடந்த சில தினங்களில் மட்டும் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் இந்திய வீரர்கள் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். அத்துடன் பொதுமக்கள் ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். இந்த ஓராண்டில் மட்டும் பாகிஸ்தான் ராணுவம் 700-க்கும் மேற்பட்ட முறை அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. இதில், 18 வீரர்கள் உள்பட 38 பேர் தற்போது வரை கொல்லப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.