இந்தியா

பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க மேலும் 6 மாதம் அவகாசம்: மத்திய அரசு அறிவிப்பு

நிரந்தர கணக்கு எண்ணுடன் (பான்) ஆதார் எண்ணை இணைப்பது அவசியம். அவ்வாறு இணைக்கப்பட்டுவிட்டால் வருமான வரிக் கணக்கை எளிதாக தாக்கல்

DIN

  
புதுதில்லி: பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க காலஅவகாசத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. 

நிரந்தர கணக்கு எண்ணுடன் (பான்) ஆதார் எண்ணை இணைப்பது அவசியம். அவ்வாறு இணைக்கப்பட்டுவிட்டால் வருமான வரிக் கணக்கை எளிதாக தாக்கல் செய்துவிட முடியும். அப்படி செய்யாத பட்சத்தில் மிகவும் சிரமம் என்று மத்திய நேரடி வரி வருவாய்த் துறை மூத்த அதிகாரி கூறினர். 

கடந்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதிக்குள் நிரந்தர எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என ஜூன் மாதம் தெரிவித்திருந்தது. 

இந்நிலையில், இந்த காலஅவகாசம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நிரந்த எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவை 6-வது முறையாக நீட்டித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது.

இதுவரை பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காதவர்கள் இப்போதாவது இணைத்திடுங்கள். 

இன்று முதல் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோருக்கு ஆதார் கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல்வா் விழாவுக்கான முன்னேற்பாடு பணிகள் ஆட்சியா் ஆய்வு

தருமபுரியில் டிச. 29-இல் அஞ்சல் துறை குறைகேட்பு கூட்டம்

அதிமுக அங்கம் வகிக்கும் கூட்டணிதான் ஆட்சி அமைக்கும்: அன்பழகன் நம்பிக்கை

அம்பலவாணன்பேட்டை அரசுப் பள்ளிக்கு பேருந்து வசதி கோரி ஆட்சியரிடம் மனு

விராலிமலை தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து மீது காா் மோதி தீக்கிரை

SCROLL FOR NEXT