இந்தியா

முஸ்லீம் லீக் நாட்டிற்கே பாதிப்பை உண்டாக்கும் வைரஸ்: உ.பி முதல்வரின் சர்ச்சை ட்வீட் 

முஸ்லீம் லீக் நாட்டிற்கே பாதிப்பை உண்டாக்கும் வைரஸ் என்ற உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் ட்வீட் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.

IANS

லக்னௌ முஸ்லீம் லீக் நாட்டிற்கே பாதிப்பை உண்டாக்கும் வைரஸ் என்ற உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் ட்வீட் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.

கேரள மாநிலம் வயநாட்டில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வியாழன் அன்று மனு தாக்கல் செய்தார். அப்போது காங்கிரசின் கூட்டணிக் கட்சியான இந்திய யூனியன் முஸ்லீம் லீகின் பெருமளவு தொண்டர்கள் அந்த கட்சியின் பச்சைக் கொடியுடன் வந்து அவரை வரவேற்றனர். அக்கட்சியானது 2014-ஆம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் காங்கிரஸ் கூட்டணியில் இணைந்து போட்டியிட்டு இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் முஸ்லீம் லீக் நாட்டிற்கே பாதிப்பை உண்டாக்கும் வைரஸ் என்ற உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் ட்வீட் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

முஸ்லீம் லீக் ஒரு வைரஸ் போன்றது. தன்னால் பாதிக்கப்பட்ட யாரையும் அது விட்டு வைப்பதில்லை. இன்று நாட்டின் முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் அந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது. அந்தக் கட்சி தேர்தலில் வென்றால் என ஆகும்? நாடு முழுவதும் அந்த வைரஸ் பரவும்.

1857-ஆம் ஆண்டு நடைபெற்ற சுதநதிரப் போரின் போது நாடே சிப்பாய் மங்கள் பாண்டேவின் பின்னால் ஆங்கிலேயருக்கு எதிராகத் திரண்டு நின்றது. ஆனால் அப்போது முஸ்லீம் லீக் வைரஸ் உருவானது. அது நாட்டை இரண்டாகப் பிரித்தது. இப்போது காங்கிரஸ் அந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதால் எல்லா இடங்களிலும் பச்சைக் கொடிகள் முளைத்துள்ளது. ஜாக்கிரதை!

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரோஹிங்கயாக்கள் இன அழிப்பு: மியான்மருக்கு எதிராக விசாரணை தொடக்கம்!

போலி ஆவணங்கள் மூலம் வெளிநாட்டில் இருந்து திருச்சி வந்தவா் கைது

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜிஎஸ்டி சாலைப் பகுதிகளில் போக்குவரத்து மாற்றம்

இன்று இந்தியா ஓபன் 2026 பாட்மின்டன் தொடக்கம்: 256 வீரா், வீராங்கனைகள் பங்கேற்பு!

சுஸுகி மோட்டாா்சைக்கிள் விற்பனை 26% உயா்வு!

SCROLL FOR NEXT