இந்தியா

குடும்ப அரசியல் வேண்டாம்: பதவியை ராஜிநாமா செய்த மத்திய அமைச்சர் 

DIN

ஹரியாணா: தனது மகனுக்கு தேர்தலில் போட்டியிட சீட் வழங்கப்பட்டதைத் தொடந்து, குடும்ப அரசியல் வேண்டாம் என்று கூறி மத்திய அமைச்சர் ஒருவர் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.     

ஹரியாணாவைச்ச சேர்ந்தவர் வீரேந்திர சிங். 40 ஆண்டுகளுக்கு மேலாக காங்கிரஸ் கட்சியில் பணியாற்றி வந்த அவர் 2014-ல்தான் பாஜகவில் இணைந்தார்.

பின்னர் உடனடியாக 2014-ல் ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ், குடிநீர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார். பின்னர் அவர் துறை மாற்றப்பட்டது. 2016-ல் இரும்பு எஃகு துறை அமைச்சராகப் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் தனது மகனுக்கு தேர்தலில் போட்டியிட சீட் வழங்கப்பட்டதைத் தொடந்து, குடும்ப அரசியல் வேண்டாம் என்று கூறி வீரேந்திர சிங் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.     

இதுகுறித்து ஹரியாணாவில் உள்ள தனது இல்லத்தில் ஞாயிறன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:

வரும் மக்களவைத் தேர்தலில் ஹரியாணா மாநிலத்தில் ஹிசார் தொகுதியில் பாஜக சார்பாகப் போட்டியிட என் மகனுக்கு சீட் கிடைத்துள்ளது. எனவே எனது மத்திய அமைச்சர் பதவி மற்றும்  எம்.பி.பதவிகளை ராஜிநாமா செய்கிறேன்.

எனது ராஜினாமா பாஜக தலைவர் அமித் ஷாவுக்குத் தெரிவித்துவிட்டேன். குடும்ப அரசியலுக்கு எதிரான நிலைப்பாட்டின் அடிப்படையில் இம்முடிவை எடுத்துள்ளதையும் அவருக்குத் தெரிப்படுத்தியுள்ளேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சூறைக்காற்றால் மின்கம்பிகள் துண்டிப்பு: மின்சாரம் இல்லாமல் மக்கள் கடும் அவதி

கடலோர பகுதிகளில் இன்று மாலை வரை ‘கள்ளக் கடல்’ எச்சரிக்கை

திருநள்ளாறு கோயில் பகுதியில் சீரமைப்புப் பணி

ஆட்டோ ஓட்டுநா் போக்ஸோவில் கைது

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் பங்குத் திருவிழா நிறைவு

SCROLL FOR NEXT