முகப்பு
இந்தியா

தில்லியில் ஆம் ஆத்மிக்கு நான்கு சீட்டுகள் வரை கொடுக்கத் தயார்: ராகுல் காந்தி 

தில்லியில் ஆம் ஆத்மிக்கு நான்கு சீட்டுகள் வரை கொடுக்கத் தயாராக இருப்பதாக காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

இந்தியா

தில்லியில் ஆம் ஆத்மிக்கு நான்கு சீட்டுகள் வரை கொடுக்கத் தயார்: ராகுல் காந்தி 

தில்லியில் ஆம் ஆத்மிக்கு நான்கு சீட்டுகள் வரை கொடுக்கத் தயாராக இருப்பதாக காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

Updated On : 31 ஜனவரி, 2024 at 7:40 AM
பகிர்:

புது தில்லி: தில்லியில் ஆம் ஆத்மிக்கு நான்கு சீட்டுகள் வரை கொடுக்கத் தயாராக இருப்பதாக காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தில்லியில் ஆம் ஆத்மியுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் கட்சி நடத்தி வரும் பேச்சுவார்த்தையில் தொடர்ந்து முட்டுக்கட்டை நீடிக்கிறது.

தில்லியில் மட்டும் கூட்டணி அமைக்க காங்கிரஸ் கட்சி விரும்புகிறது. ஆனால் ஆம் ஆத்மியோ ஹரியாணா மற்றும்  பஞ்சாப் மாநிலங்களிலும் கூட்டணி அமைக்க விரும்புவதாலேயே தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது.

இந்நிலையில் தில்லியில் ஆம் ஆத்மிக்கு நான்கு சீட்டுகள் வரை கொடுக்கத் தயாராக இருப்பதாக காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

தில்லியில் காங்கிரசும் ஆம் ஆத்மியும் கூட்டணி வைத்தால் அது பாஜகவுக்கு பேரழிவாக இருக்கும். அதை உறுதி செய்வதற்காக தில்லியில் ஆம் ஆத்மிக்கு நான்கு சீட்டுகள் வரை கொடுக்க காங்கிரஸ் தயாராக இருக்கிறது.

ஆனால் கேஜரிவால் மீண்டும் முடிவை மாற்றிக் கொண்டுள்ளார்.

எங்களது கதவுகள் திறந்தே இருக்கின்றன. ஆனால் அவகாசம் குறைவாக இருக்கிறது.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.      

முழு கட்டுரையைப் படிக்க →