இந்தியா

வாரணாசியில் அமித் ஷாவுடன் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் ஆலோசனை

DIN

வாரணாசியில் அமித்ஷாவுடன் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட கூட்டணி கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

கடந்த 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் வாராணசியில் போட்டியிட்ட நரேந்திர மோடி, 3.7 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். இந்தத் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் அவர், தனது வேட்புமனுவை இன்று தாக்கல் செய்கிறார். 

இந்த நிகழ்வில், பிகார் முதல்வர் நிதீஷ் குமார், சிவசேனை கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே, சிரோமணி அகாலி தளம் தலைவர் பிரகாஷ் சிங் பாதல், மத்திய அமைச்சரும், லோக் ஜனசக்தி கட்சியின் தலைவருமான ராம் விலாஸ் பாஸ்வான் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள். இவர்களைத் தவிர, அதிமுக, அப்னா தளம் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்களும் பங்கேற்கவுள்ளனர். 

இதனிடையே வாரணாசியில் பா.ஜ.க., தேசிய தலைவர் அமித் ஷா தலைமையில் கூட்டணி கட்சி தலைவர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தம்பிதுரை, அமைச்சர் வேலுமணி உள்பட கூட்டணி கட்சியைச் சேர்ந்த தலைவர்களும் பங்கேற்றனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி மக்களவைத் தொகுதிகளுக்கு காங்கிரஸ் -ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பு குழு அமைப்பு

மேற்கு தில்லி பாஜக வேட்பாளா் கமல்ஜீத் செராவத் வேட்புமனு தாக்கல் : ராஜஸ்தான் முதல்வா் பங்கேற்பு

தில்லி மகளிா் ஆணையத்தில் சட்டவிரோத நியமனம் 52 ஒப்பந்த ஊழியா்கள் நீக்கம்: துணை நிலை ஆளுநா் நடவடிக்கை

கேஜரிவால் கைதுக்கு எதிராக கையெப்ப இயக்கம் ஆம் ஆத்மி கட்சி தொடங்கியது

வடமேற்கு தில்லியில் தொழிற்சாலைகள் மேம்படுத்தப்படும் பாஜக வேட்பாளா் யோகேந்திர சந்தோலியா வாக்குறுதி

SCROLL FOR NEXT