இந்தியா

இத்தாலிய அரசிடம் இருந்து இப்போதுதான் சுதந்திரம் கிடைத்துள்ளது: கங்கனா ரணாவத்

இத்தாலிய அரசிடம் இருந்து இப்போதுதான் விடுதலை கிடைத்துள்ளது என்று பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் தெரிவித்தார். 

DIN

மக்களவைக்கு 4-ஆவது கட்டமாக, மகாராஷ்டிரம், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம் உள்பட 9 மாநிலங்களில் உள்ள 72 தொகுதிகளில் திங்கள்கிழமை வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், மொத்தம் 64 சதவீத வாக்குகள் பதிவாகின.

மும்பையில் வாக்களித்த பாலிவுட் பிரபலங்கள்:

நடிகர் அமிதாப் பச்சன், தனது மனைவி ஜெயா பச்சன், மகன் அபிஷேக், மருமகள் ஐஸ்வர்யாவுடன் வந்து வாக்களித்தார். நடிகர்கள் ஷாரூக் கான், சல்மான்கான், ஆமிர் கான், ஹிருத்திக் ரோஷன், வருண் தவான், சஞ்சய் தத், நடிகைகள் ரேகா, மாதுரி தீட்சித், பிரியங்கா சோப்ரா, பிரீத்தி ஜிந்தா, தீபிகா படுகோன், கங்கனா ரணாவத் உள்ளிட்டோரும் ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.  

இந்நிலையில், இத்தாலிய அரசிடம் இருந்து இப்போதுதான் விடுதலை கிடைத்துள்ளது என்று பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் தெரிவித்தார். இதுதொடர்பாக வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

இத்தனை நாட்களாக நம் நாடு முகலாயர்கள், ஆங்கிலேயர்கள் மற்றும் இத்தாலியர்களிடம் அடிமைப்பட்டிருந்தது. இப்போதுதான் நம் நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்திருப்பதை நான் உணர்கிறேன். எனவே உங்கள் சுதந்திரத்தை காக்க வாக்களியுங்கள் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

10 கோடி பார்வைகளைக் கடந்த மோனிகா பாடல்!

இந்திய பேட்டிங் வரிசையில் ‘தடுப்புச் சுவராக’ திகழ்ந்தவர்! -புஜாராவுக்கு பிசிசிஐ புகழாரம்

மேற்கு மல சாரலிலே... ரோஸ் சர்தானா

ரூ.71,900 சம்பளத்தில் தமிழ்நாடு பிரிண்டிங் துறையில் வேலை வேண்டுமா?: உடனே விண்ணப்பிக்கவும்!

கண் இரண்டில் மோதி... குஷி தூபே!

SCROLL FOR NEXT