இந்தியா

உத்தரபிரதேசத்தில் காட்டாட்சி நிலவுவதை உறுதி செய்துள்ளது: உன்னாவ் தீர்ப்பு குறித்து பிரியங்கா விளாசல் 

உத்தரபிரதேசத்தில் காட்டாட்சி நிலவுவதை உறுதிப்படுத்தும் விதமாக உன்னாவ் வழக்குகளை தில்லிக்கு மாற்றி, உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு அமைந்துள்ளதாக பிரியங்கா காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.  

DIN

புது தில்லி: உத்தரபிரதேசத்தில் காட்டாட்சி நிலவுவதை உறுதிப்படுத்தும் விதமாக உன்னாவ் வழக்குகளை தில்லிக்கு மாற்றி, உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு அமைந்துள்ளதாக பிரியங்கா காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.  

உன்னாவ் பாலியல் வன்கொடுமை தொடர்புடைய 5 வழக்குகளையும் உத்தரப் பிரதேசத்திலிருந்து தில்லி நீதிமன்றத்துக்கு மாற்றுமாறு உச்சநீதிமன்றம் வியாழனன்று உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் உத்தரபிரதேசத்தில் காட்டாட்சி நிலவுவதை உறுதிப்படுத்தும் விதமாக உச்ச நீதிமன்றத் தீர்ப்பு அமைந்துள்ளதாக பிரியங்கா காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.  

இதுதொடர்பாக தில்லியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

உத்தரபிரதேச மாநிலத்தில் காட்டாட்சி நிலவுவதையும், மாநில பா.ஜனதா அரசு இந்த விவகாரத்தில் தோல்வி அடைந்து உள்ளதையும் உறுதிப்படுத்தும் வகையில் உச்ச நீதிமன்றத்  முத்திரை குத்தப்பட்டு இருக்கிறது.

குற்றம் சாட்டப்பட்டுள்ள குல்தீப்சிங் செங்கர் எம்.எல்.ஏ.வை தற்போது கட்சியில் இருந்து நீக்கியதன் மூலம் ஒரு குற்றவாளிக்கு பாதுகாப்பு அளித்துள்ளதை பாஜக ஒப்புகொண்டுள்ளது.

இதன்மூலம் தனது தவறை சரி செய்ய குறைந்தபட்சம் ஒரு படியை எடுத்து வைத்துள்ளது.

இவ்வாறு அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விலை உயர்ந்த வாக்குரிமையைத் திருட அனுமதிப்பதா? பிரியங்கா

வாக்குத் திருட்டு: திருடன் மாட்டிக்கொண்டால் அமைதியாகவே இருப்பான்! -பாஜகவை விமர்சிக்கும் ராகுல்

கோதுமை கையிருப்பு கட்டுப்பாடு மாற்றியமைப்பு: மத்திய அரசு

சமூக வலைதளங்களில் வலை விரிக்கும் பெண்கள்! புதிய மோசடி அம்பலம்!

லிவர்பூல் கால்பந்து அணியின் வரலாற்றில் முதல்முறை... சாதனையுடன் முன்னேற்றம்!

SCROLL FOR NEXT