இந்தியா

முதல்வருக்கு பூங்கொத்து குடுத்த மேயருக்கு ரூ.500 அபராதம்: ஏன் தெரியுமா? 

DIN

பெங்களூரு: கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு பூங்கொத்து குடுத்த மாநகர மேயருக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் குமாரசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சி நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்த பிறகு, புதிய முதல்வராக பாஜகவின் எடியூரப்பா பொறுப்பேற்றார். அவரை  பல்வேறு தரப்பினரும் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து தெரிவிப்பதுடன், பரிசுப் பொருட்களையும் அளித்து வருகின்றனர்.

அந்தவரிசையில் பெங்களூரு மாநாகராட்சியின் மேயரான கங்காம்பிகே மல்லிகார்ஜுன் முதல்வர் எடியூரப்பாவை சந்திக்க சென்றார். அவருக்கு மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்த அவர், அத்துடன் கனிகள் மற்றும் உலர் கனிகள் கொண்ட சிறிய கூடை ஒன்றை பரிசாக அளித்து, எடியூரப்பாவுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.

ஆனால் எதிர்பாராத திருப்பமாக பெங்களூரு மாநாகராட்சி சார்பில் மேயர் கங்காம்பிகே மல்லிகார்ஜுனுக்கு சனிக்கிழமையன்று  500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

பெங்களூரு மாநாகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 2016-ம் ஆண்டிலிருந்து பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் எடியூரப்பாவுக்கு மேயர் அளித்த பரிசு கூடையின் மேற்புறத்தில், பிளாஸ்டிக் உறை சுற்றப்பட்டிருந்ததால், விதிமீறல் காரணமாக  அந்த நகரத்தின் மேயர் என்றும் பாராமல் கங்காம்பிகே மல்லிகார்ஜுனுக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சின்னஞ்சிறு சித்திரமே....ரவீனா!

வேட்டையன் கதை வித்தியாசமானது: ராணா டக்குபதி

அயோத்தி ராமர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வழிபாடு

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

SCROLL FOR NEXT