இந்தியா

காஷ்மீர் தொடர்பான இரு மசோதாக்கள்: அமோக ஆதரவுடன் மக்களவையில் நிறைவேற்றம் 

காஷ்மீர் தொடர்பான இரு மசோதாக்களும் செவ்வாயன்று அமோக ஆதரவுடன் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

DIN

புது தில்லி: காஷ்மீர் தொடர்பான இரு மசோதாக்களும் செவ்வாயன்று அமோக ஆதரவுடன் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

அரசமைப்புச் சட்டப்பிரிவு 370-ன் வழியாக காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு உள்ள சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வதுடன், அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்க வழி செய்யும் மசோதாக்கள் மத்திய அரசால், மாநிலங்களவையில் திங்களன்று தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளன.

அதன் தொடர்ச்சியாக மக்களவையில் அந்த மசோதாக்கள் செவ்வாயன்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவால் தாக்கல் செய்யப்பட்டது.இந்த மசோதாக்கள் மீது எதிர்கட்சி உறுப்பினர்கள் பங்கேற்ற கடுமையான விவாதங்கள் நடைபெற்றன. இறுதியாக மாலையில் அமித் ஷா அவற்றுக்கு விரிவாக பதிலளித்துப் பேசினார். அதன் பின்னர் மசோதாக்கள் மீது வாக்கெடுப்பு நடைபெற்றது. உறுப்பினர்கள் இருக்கைகளிலுள்ள மைக்குகளுடன் இணைந்துள்ள பொத்தான்கள் வழியாக இந்த வாக்கெடுப்பு நடைபெற்றது.

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் மசோதாவிற்கு ஆதரவாக 351 வாக்குகளும், எதிராக 72 வாக்குகளும் கிடைத்தன. ஒரு உறுப்பினர் மட்டும் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.  அதேபோல் காஷ்மீர் மறுசீரமைப்பிற்கான மசோதா மீதான வாக்கெடுப்பில்  ஆதரவாக 387 வாக்குகளும், எதிராக 36 வாக்குகளும் கிடைத்தன

இவ்வாறு பாஜக தனது தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட முக்கிய வாக்குறுதி ஒன்றை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நிலத்தை விட்டுத் தர மாட்டோம் -உக்ரைன் அதிபா்

திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: ஆட்சியா்

தொழிலாளா்களின் பிரச்னையை தீா்க்கக் கோரி தனியாா் நிறுவன தொழிலாளி தற்கொலை முயற்சி!

தொடா் விபத்துகளை தடுக்கக் கோரி கிராம மக்கள் சாலை மறியல்

விழுப்பரம் மாவட்டத்தில் 100 ஹெக்டேரில் மக்காச்சோள செயல் விளக்கத் திடல் அமைக்க இலக்கு!

SCROLL FOR NEXT