இந்தியா

காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்  ஒப்புதல் 

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவிற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெள்ளியன்று ஒப்புதல் அளித்துள்ளார்.

DIN

புது தில்லி: நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவிற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெள்ளியன்று ஒப்புதல் அளித்துள்ளார்.

அரசமைப்புச் சட்டப்பிரிவு 370-ன் வழியாக காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு உள்ள சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திங்களன்று உத்தரவு வெளியிட்டார். பின்னர் அது தொடர்பான மசோதாவும், அம்மாநிலத்தை ஜம்மு காஷ்மீர்  மற்றும் லடாக் என்னும்  இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்க வழி செய்யும் மசோதாக்கள் மத்திய அரசால், மாநிலங்களவையில் கடந்த திங்களன்றும், மக்களவையில் செவ்வாயன்றும் நிறைவேற்றப்பட்டது.  அதைத் தொடர்ந்து இதற்கான அரசாணையும் உடனடியாக வெளியிடப்பட்டது.

இந்நிலையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவிற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெள்ளியன்று ஒப்புதல் அளித்துள்ளார்.

இந்த மசோதாவானத்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட நிலையில், குடியரசுத் தலைவர் தற்போது ஒப்புதல் அளித்துள்ளார் விரைவில் இதுகுறித்து அரசாணைவெளியிடப்படும் என்று தெரிகிறது.. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முன்மாதிரி பள்ளி..

கத்தரிக்காய் குருமா

காரைக்கால் - பேரளம் இடையே பயணிகள் ரயில் இயக்க வலியுறுத்தல்

வேளாங்கண்ணி ஆண்டு பெருவிழா: சிறப்பு ரயில்கள் இயக்க கோரிக்கை

மழையால் சரிந்த ரயில் நிலைய மேற்கூரை

SCROLL FOR NEXT