காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாக பாஜக எம்பி ரூபா கங்குலியின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்பி ரூபா கங்குலி. இவருடைய மகன் ஆகாஷ் முகர்ஜி(20). நேற்றிரவு இவர் கோல்ஃப் கிரீன் பகுதியில் காரை வேகமாக ஓட்டி வந்துள்ளார். அப்போது இவருடைய கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து கோல்ப் கிளப்பின் சுவரில் மோதியது.
இந்த சம்பவத்தில் சுவர் இடிந்து விழுந்தது. மேலும் ஆகாஷுக்கும் லேசான காயம் ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அவரை காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் ஆகாஷ் முகர்ஜி இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரபல பாடகி மற்றும் வங்காள நடிகையான ரூபா கங்குலி கடந்த 2015ஆம் ஆண்டு பாஜகவில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.