இந்தியா

சரிந்து வரும் கார் விற்பனையை ஊக்குவிக்க எஸ்பிஐ எடுத்திருக்கும் புது முயற்சி!

பொருளாதார மந்த நிலையால் கார் விற்பனை சரிந்து வரும் நிலையில், அதனை ஊக்குவிக்க கார் கடனுக்கான பிராஸஸிங் கட்டணத்தை நீக்குவதாக எஸ்பிஐ அறிவித்துள்ளது.

IANS


புது தில்லி: பொருளாதார மந்த நிலையால் கார் விற்பனை சரிந்து வரும் நிலையில், அதனை ஊக்குவிக்க கார் கடனுக்கான பிராஸஸிங் கட்டணத்தை நீக்குவதாக எஸ்பிஐ அறிவித்துள்ளது.

விழாக் கால சலுகையாகவும், பண்டிகைக் காலங்கள் நெருங்குவதால் கார் விற்பனையை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்க எஸ்பிஐ வங்கி முடிவு செய்துள்ளது.

அதன்படி, கார் கடன் வழங்குவதற்கான பிராஸஸிங் கட்டணத்தை நீக்கியிருப்பதோடு, கார் கடனுக்கு மிகக் குறைந்த வட்டி விகிதமான 8.70% ஐயும் அறிமுகம் செய்துள்ளது.

எஸ்பிஐயின் இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து மேலும் சில பொதுத் துறை வங்கிகளும், கார் கடன்களுக்கு சலுகைகள் வழங்க முன் வந்துள்ளன.

இந்திய வாகன உற்பத்தித் துறை எதிர்பாராத வகையில் மந்தநிலையை எதிர்கொண்டுள்ளது. இதனால் கார் உற்பத்தி ஆலைகளிலும், கார் உதிரிபாக உற்பத்தி ஆலைகளிலும் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், கார் விற்பனையை அதிகரிக்க பொதுத்துறை வங்கிகள் நடவடிக்கை எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அர​வணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்​ணன்

வார பலன்கள் - மீனம்

வார பலன்கள் - கும்பம்

வார பலன்கள் - மகரம்

வார பலன்கள் - தனுசு

SCROLL FOR NEXT