இந்தியா

ஜம்முவில் டோக்ரா சதர் சபா தலைவர் கைது

ஜம்முவில் டோக்ரா சதர் சபா கட்சித் தலைவரும், முன்னாள் அமைச்சருமான குல்சைன் சிங் சாரக்  கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

DIN


ஜம்முவில் டோக்ரா சதர் சபா கட்சித் தலைவரும், முன்னாள் அமைச்சருமான குல்சைன் சிங் சாரக்  கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
குல்சைன் சிங் சாரக்கின் மகன் கூறுகையில், கட்சித் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்திக்க தந்தை சென்றார். அப்போது, எந்தவொரு காரணத்தையும் கூறாமல் அவரை போலீஸார் கைது செய்தனர். சிறப்பு அந்தஸ்து ரத்தை எங்களது கட்சி வரவேற்பதாக தெரிவித்துள்ளது. இருப்பினும், தந்தையை கைது செய்திருப்பது ஜனநாயகப் படுகொலை என்றார்.
செய்தியாளர்களை சந்திப்பதற்கு முன் ஜம்மு-காஷ்மீர் பொதுச் செயலரும், முன்னாள் சட்ட மேலவை உறுப்பினருமான ரவீந்தர் சர்மாவையும் போலீஸார் கடந்த 16ஆம் தேதி கைது செய்து காவலில் வைத்தனர். சிறப்பு அந்தஸ்து பிரிவு நீக்கப்பட்டதை அடுத்து, ஜம்மு-காஷ்மீர் காங்கிரஸ் தலைவர் ஜி.ஏ. மீர், தேசிய மாநாட்டுக் கட்சியின் மாகாணத் தலைவர் தேவேந்தர் சிங் ராணா உள்ளிட்டோர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.1.20 கோடி மதிப்புள்ள பிளேடுகள் நன்கொடை!

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் விடியவிடிய தர்னா!

விவசாயிகள் மீது பொய் வழக்கு: சீமான் கண்டனம்

வங்கதேச மாணவர் இயக்கத் தலைவர் கொலை! மீண்டும் வெடித்த வன்முறை!

இந்தியா-இலங்கையில் கல்வி அழுத்தம்!

SCROLL FOR NEXT