இந்தியா

உன்னாவ்-வில் மீண்டும் ஒரு பாலியல் பலாத்கார சம்பவம்: நீதிபதி அலுவலகம் அருகே தீக்குளிக்க முயன்ற இளம்பெண் 

பாஜக எம்.எல்.ஏ குல்தீப் செங்கர் தொடர்புடைய உன்னாவ் பாலியல் பலாத்கார சம்பவத்தின் விசாரணை நடந்து வரும் சூழ்நிலையில், தற்போது அங்கு மீண்டும் ஒரு பலாத்கார சம்பவம் நடந்துள்ளது.  

IANS

உன்னாவ்: பாஜக எம்.எல்.ஏ குல்தீப் செங்கர் தொடர்புடைய உன்னாவ் பாலியல் பலாத்கார சம்பவத்தின் விசாரணை நடந்து வரும் சூழ்நிலையில், தற்போது அங்கு மீண்டும் ஒரு பலாத்கார சம்பவம் நடந்துள்ளது.  

உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் உள்ள மக்கி என்னும் கிராமத்தில் இளம்பெண் ஒருவரை, பாஜக எம்.எல்.ஏ குல்தீப் செங்கர் பாலியல் பலாத்காரம் செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கு நடைபெற்று வருகிறது. சிபிஐ தற்போது வழக்கை விசாரித்து வரும் வேளையில், பாதிக்கப்பட்ட இளம்பெண் மற்றும் அவரது வழக்கறிஞர் இருவரும் கடந்த மாதம் 28-ஆம் தேதி ரே பரேலியில் நடைபெற்ற சாலை விபத்தில் படுகாயமடைந்து தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வருகிறார்கள். அந்தப் பெண்ணின் உறவினர்களான பெண்கள் இருவர் விபத்தில் மரணமடைந்தனர். இதுதொடர்பாகவும் விசாரணை நடைபெறு வருகிறது. செங்கரை கட்சியிலிருந்து பாஜக நீக்கியுள்ளது.

இந்நிலையில் தற்போது உன்னாவ்வில் மீண்டும் ஒரு பலாத்கார சம்பவம் நடந்துள்ளது.   

அதே மக்கி கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரைக் கடந்த ஜூலை 1-ஆம் தேதியன்று மூன்று பேர் கடத்திச்சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதுதொடர்பாக அவர் போலீசில் புகார் கொடுத்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. யாரும் கைதும் செய்யப்படவில்லை.

ஆனால் தற்போது குற்றவாளிகள் அந்த பெண்ணையும் குடும்பத்தாரையும் மிரட்டுவதாகத் தெரிகிறது.  இதன் காரணமாக பாதிக்கப்பட்ட இளம்பெண்ணும் அவரது தாயாரும் வியாழனன்று மாவட்ட நீதிபதி அலுவலகத்தின் அருகே தீக்குளிக்க முயன்றுள்ளனர்.  ஆனால் அவர்கள் இருவரையும் அங்கு காவலுக்கு இருந்த காவலர்கள் காப்பாற்றியுள்ளனர். 

அதேசமயம் வட்டார காவல் அதிகாரி கவுரவ் திரிபாதி செய்தியாளர்களிடம், குற்றவாளிகள் மூவரில் ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள இருவரைத் தேடும் பணி நடந்து வருவதாகவும்  தெரிவித்தார்.

இருந்தாலும் உன்னாவ் போலீசாரின் நடவடிக்கை அங்கு தொடர்ந்து கேள்விகளை எழுப்பி வருகிறது.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உக்ரைனில் ரஷியா ஏவுகணைத் தாக்குதல்: தாய், மகள் உயிரிழப்பு; 14 போ் காயம்!

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் குடியிருப்பு வளாகம் கட்டுவதை எதிா்த்த வழக்குகள் தள்ளுபடி!

தமிழகத்தில் வாழும் வால்மீகி சமூகத்தினரை பழங்குடியினா் பட்டியலில் சோ்க்க வேண்டும்: மாநிலங்களவையில் அதிமுக கோரிக்கை

ஒரு கட்சி ஆட்சி ஜனநாயகத்துக்கு விரோதமானது: க. கிருஷ்ணசாமி

தோ்தல் பணிகளில் வெளிப்படைத் தன்மை அவசியம்: ஆட்சியா் அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT