முகப்பு
இந்தியா

காஸியாபாத் பயங்கரம்: கட்டடத்தில் இருந்து குதித்து தம்பதி தற்கொலை; வீட்டில் மகனும் மகளும் கொலை

காஸியாபாத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பின் 8வது மாடியில் இருந்து ஒரு தம்பதி உட்பட மூன்று பேர் தற்கொலை செய்து கொண்டனர். 

Updated On : 31 ஜனவரி, 2024 at 1:23 PM
Ghaziabad incident
பகிர்:


காஸியாபாத்: காஸியாபாத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பின் 8வது மாடியில் இருந்து ஒரு தம்பதி உட்பட மூன்று பேர் தற்கொலை செய்து கொண்டனர். 

அவர்களது வீட்டில் இளம் வயது மகனும், மகளும் விஷ ஊசி செலுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தனர். வீட்டில் வளர்த்து வந்த முயலும் கொல்லப்பட்டிருந்தது.

உயிரிழந்தவர் குல்ஷான் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர் தனது மனைவி மற்றும் தொழில் கூட்டாளி சஞ்சனாவுடன் தான் வசித்து வந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் 8வது மாடியில் இருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலை செய்வதற்கு முன்பு, இந்த தம்பதி தங்களது மகன் மற்றும் மகளுக்கு விஷ ஊசி செலுத்தி கொலை செய்துள்ளனர். அவர்கள் வளர்த்து வந்த முயலும் கொல்லப்பட்டிருக்கிறது என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த கொலை மற்றும் தற்கொலைகளின் பின்னணி குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தற்கொலைக் கடிதமும் கைப்பற்றப்பட்டுள்ளது. இறப்பதற்கு முன்பு மகனும் மகளும் சுவற்றில் எழுதிய சில வார்த்தைகளையும் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.