முகப்பு
இந்தியா

குடியரசுத் தலைவர் மாளிகை நோக்கி பேரணியில் ஈடுபட்ட ஜே.என்.யு மாணவர்கள் மீது போலீசார் தடியடி!

கட்டண உயர்வைக் கண்டித்து போராட்டம் நடத்தி வரும் தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள், இன்று குடியரசுத் தலைவர் மாளிகையை  நோக்கி பேரணியில் ஈடுபட்டபோது, போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்தினர். 

Updated On : 31 ஜனவரி, 2024 at 1:27 PM
பகிர்:

கட்டண உயர்வைக் கண்டித்து போராட்டம் நடத்தி வரும் தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள், இன்று குடியரசுத் தலைவர் மாளிகை நோக்கி பேரணியில் ஈடுபட்டபோது, போலீஸார் அவர்கள் மீது தடியடி நடத்தினர். 

விடுதி கட்டண உயர்வு மற்றும் தேர்வுக் கட்டணத்தை ரத்த செய்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தலைநகர் தில்லியிலுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில் இன்று, மாணவர்கள் அனைவரும் குடியரசுத் தலைவர் மாளிகை நோக்கி பேரணியாக சென்றனர். கட்டண உயர்வு தொடர்பாக குடியரசுத் தலைவரிடம் மனு அளிக்க மாணவர்கள் சென்றுள்ளனர். அப்போது, அவர்களைத் தடுக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். 

இதனால் இரு தரப்புக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில், போராட்டத்தைக் கலைக்க,  போலீஸார், மாணவர்கள் மீது தடியடி நடத்தியுள்ளனர். இதனால் அப்பகுதி பரபரப்பான நிலையில் உள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →