முகப்பு
இந்தியா

தில்லியில் மீண்டும் போராட்டம்: 6 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல்!

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தில்லியில் இன்று (செவ்வாய்கிழமை) மீண்டும் போராட்டம் நடைபெற்றதையடுத்து, 6 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

Updated On : 31 ஜனவரி, 2024 at 1:34 PM
பகிர்:


குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தில்லியில் இன்று (செவ்வாய்கிழமை) மீண்டும் போராட்டம் நடைபெற்றதையடுத்து, 6 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

தில்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஜாபர்பாத் பகுதியில் இன்று மீண்டும் போராட்டம் நடைபெற்றது. இதில், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென போலீஸார் மீது கற்களை வீசி வன்முறையில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. இதனால், போலீஸார் மற்றும் போராட்டக்காரர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, போலீஸார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி தடியடி நடத்தினர்.

இதன் காரணமாக தில்லியில் சீலாம்பூர் - ஜாபர்பாத் இடையேயான சாலை மூடப்பட்டது. இதனால், அங்கு பரபரப்பான சூழல் தென்பட்டது. 

இந்நிலையில், தற்போது வடகிழக்கு தில்லி பகுதியில் சீலாம்பூர், கோகுல்புரி, ஜாப்ராபாத் மற்றும் மௌஜ்பூர் - பாபர்பூர் மற்றும் ஷிவ் விஹார் ஆகிய 6 மெட்ரோ ரயில் நிலையங்களில் மெட்ரோ ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தில் செல்லும் மெட்ரோ ரயில்கள் குறிப்பிட்ட அந்த 6 ரயில் நிலையங்களில் நிற்காது எனவும் தில்லி மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

முன்னதாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜாமியா பல்கலைக்கழகம் அருகே நடைபெற்ற போராட்டம் வன்முறையில் முடிந்ததையடுத்து 15 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →