முகப்பு
இந்தியா

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தில்லியில் காங்கிரஸ் கட்சியினர் சத்தியாகிரகப் போராட்டம்

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து தில்லி ராஜ்காட்டில் காங்கிரஸ் கட்சியினர் சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Updated On : 31 ஜனவரி, 2024 at 1:39 PM
பகிர்:

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து தில்லி ராஜ்காட்டில் காங்கிரஸ் கட்சியினர் சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குடியுரிமைத் திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் போராட்டம் வலுப்பெற்று வருகிறது. பல மாநிலங்களில் போராட்டம் வன்முறையாகவும் மாறி வருகின்றன. 

இந்நிலையில், குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து தில்லி ராஜ்காட்டில் காங்கிரஸ் கட்சியினர் சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவருமான சோனியா காந்தி தலைமையில் நடைபெறும் போராட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் ப்ரியங்கா காந்தி, கட்சியின் மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத், கமல் நாத், அகமது படேல், ஆனந்த் ஷர்மா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர். 

தொடர்ந்து போராட்டத்தின் இடையே காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அரசியலமைப்பின் முன்னுரையை வாசித்தார். அதைத் தொடர்ந்து மன்மோகன் சிங் மற்றும் ராகுல் காந்தியும் வாசித்தனர். 

முழு கட்டுரையைப் படிக்க →