ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட மோதலில் அமெரிக்க ராணுவ வீரர் பலி
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட பயங்கர மோதலில் நேட்டோ தலைமையிலான..
காபூல்: ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட பயங்கர மோதலில் நேட்டோ படையைச் சேர்ந்த அமெரிக்க ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார்.
ராணுவ வீரர் உயிரிழைந்தையடுத்து, அமெரிக்க ராணுவ கொள்கையின் படி உயிரிழந்த ராணுவ வீரரின் எந்த தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை.
குந்தூஸ் மாகாணத்தின் சஹார் தாரா மாவட்டத்தில் ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ள அமெரிக்காவின் நேட்டோ படைகள் மீது கிளர்ச்சியாளர்களின் ஐ.இ.டி. வெடிகுண்டை வீசி தாக்குதலில் ஈடுபட்டதாக தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபியுல்லா முஜாஹித் கூறியுள்ளார்.
சஹ்ர் தாரா மாவட்டத்தின் ஹாஜி சஃபர்பாய் பகுதியில் சோதனை நடத்த முயன்ற அமெரிக்க படையை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.. இதன் விளைவாக ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார். மற்றொரு ராணுவ வீரர் பலத்த காயமடைந்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.