முகப்பு
இந்தியா

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா தலைமையில் மாபெரும் பேரணி

குடியுரிமைத் திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் மாபெரும் பேரணி நடைபெற்று வருகிறது. 

Updated On : 31 ஜனவரி, 2024 at 1:39 PM
பகிர்:

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் 4வது முறையாக மாபெரும் பேரணி நடைபெற்று வருகிறது. 

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வலுப்பெற்று வருகிறது. நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் அரசியல் கட்சிகள், மாணவர்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். 

இதன் தொடர்ச்சியாக, குடியுரிமை சட்டத் திருத்தம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்கம் தலைநகர் கொல்கத்தாவில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் பேரணி நடைபெற்று வருகிறது. இதில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகர்கள், தொண்டர்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். மத்திய பாஜக அரசு மற்றும் பிரதமர் மோடிக்கு எதிராக அவர்கள் கோஷங்களை எழுப்பினர். 

இதற்கு முன்னதாக மூன்று முறை கொல்கத்தாவில் வெவ்வேறு இடங்களில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் பேரணி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. 

முழு கட்டுரையைப் படிக்க →