ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டால்: எம்பிக்களிடையே புன்னகையை வரவழைத்த சுமித்ரா மகாஜன்
மக்களவை உறுப்பினர்கள் ஒருவர் மனதை ஒருவர் புரிந்து கொண்டால் எனது வேலை எளிதாகிவிடும் என்று மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் கூறியுள்ளார்.
புது தில்லி: மக்களவை உறுப்பினர்கள் ஒருவர் மனதை ஒருவர் புரிந்து கொண்டால் எனது வேலை எளிதாகிவிடும் என்று மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் பல்வேறு காரணங்களால் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபடுவதும், அவை ஒத்திவைப்பதும் என இருக்கும் நிலையில், சுமித்ரா மகாஜனின் இந்த பேச்சால் மக்களவை உறுப்பினர்கள் அனைவரின் முகத்திலும் புன்னகை மலர்ந்தது.
கேள்வி நேரத்தின் போது பேசிய மார்க்ஸ்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் சம்பத், எனது இதயத்தில் இருந்து இந்த கேள்வியைக் கேட்பதாகக் கூறினார்.
கேள்விக்கு பதிலளிக்க எழுந்த மத்திய தகவல் மற்றும் தொலைத் தொடர்புத் துறை இணை இயக்குநர் ராஜ்யவர்தன் ரத்தோர், தானும் இதயத்தில் இருந்தே பதிலளிப்பதாகத் தெரிவித்தார்.
இதைக் கேட்ட சுமித்ரா மகாஜன், இங்கிருக்கும் அனைத்து உறுப்பினர்களும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டால் எனது வேலை எளிதாகி விடும் என்று கூறினார். இதைக் கேட்ட மக்களவை உறுப்பினர்கள் அனைவரும் சிரித்துவிட்டனர்.