முகப்பு
இந்தியா

விரைவில் தூங்கா மாநிலமாக மாறப் போகிறது குஜராத்: மாற்றி யோசிக்கும் மாநில அரசு!

குஜராத் மாநிலத்தில் கடைகள் மற்றும் உணவகங்கள் திறந்திருக்கும் நேரத்துக்கு இருக்கும் கட்டுப்பாட்டை நீக்க மாநில அரசு முடிவெடுத்துள்ளது.

Updated On : 31 ஜனவரி, 2024 at 7:05 AM
பகிர்:


காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் கடைகள் மற்றும் உணவகங்கள் திறந்திருக்கும் நேரத்துக்கு இருக்கும் கட்டுப்பாட்டை நீக்க மாநில அரசு முடிவெடுத்துள்ளது.

இதன் மூலம், குஜராத்தில் 24 மணி நேரமும் கடைகள், உணவகங்கள் திறந்திருக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

நேற்று மாநில அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர் நிதின் படேல், முதல்வர் விஜய் ரூபானி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் குஜராத் கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம் 1948ல் மாற்றம் செய்யவும், இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை இவற்றை திறந்து வைக்கும் வகையில் திருத்தம் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

வரும் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரிலேயே இந்த சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்றவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதனால், குஜராத்தில் உள்ள கடைகள், உணவகங்கள், நிறுவனங்கள் 24 மணி நேரமும் திறந்திருக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், இரவு நேரப் பணிகளுக்கு ஏராளமான இளைஞர்கள் பணியமர்த்தப்படுவதன் மூலம் வேலை வாய்ப்பு உருவாக்கப்படும்.

7 லட்சம் வணிக நிறுவனங்களில் சுமார் 10 லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றுகிறார்கள். இனி இரவு நேரப் பணிக்கும் ஆட்கள் நியமிக்கப்பட்டால் வேலை வாய்ப்பு அதிகரிக்கப்படும். அதில்லாமல், கூடுதல் பணி நேரத்துக்கு தற்போது 1.5 மடங்கு ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதையும் 2 மடங்காக உயர்த்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.