வேலையில்லாத் திண்டாட்டம் இருப்பதை மோடி அரசு ஒரு போதும் ஒப்புக் கொள்ளாது: ராகுல்
இந்தியாவில் வேலையில்லாத் திண்டாட்டம் இருப்பதை மோடி அரசு ஒரு போதும் ஒப்புக் கொள்ளாது என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறினார்.
இந்தியாவில் வேலையில்லாத் திண்டாட்டம் இருப்பதை மோடி அரசு ஒரு போதும் ஒப்புக் கொள்ளாது என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறினார்.
தில்லியில் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் ராகுல் காந்தி உரையாடினார். அப்போது அவர் கூறியதாவது, பிரதமர் நரேந்திர மோடிக்கு நான் சவால் விடுகிறேன், என்னுடன் ரஃபேல், ஊழல் மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம் குறித்து விவாதம் நடத்த மோடி தயாரா என்று கேள்வி எழுப்பினார்.
மேலும் அவர் பேசுகையில், பிரதமர் மோடி மாணவர்களுடன் பேச வேண்டும். வேலையில்லாத் திண்டாட்டம் குறித்து மாணவர்களுடன் அவர் விவாதம் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.