முகப்பு
இந்தியா

பயங்கரவாத முகாம்கள் மீதான விமானப் படை தாக்குதல் ராணுவ நடவடிக்கையே அல்ல!

பாகிஸ்தான் எல்லையில் இருந்த ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத பயிற்சி முகாம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ராணுவ நடவடிக்கையே அல்ல என்று இந்திய வெளியுறவுச் செயலர் கூறியுள்ளார்.

Updated On : 31 ஜனவரி, 2024 at 7:14 AM
பகிர்:


புது தில்லி: பாகிஸ்தான் எல்லையில் இருந்த ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத பயிற்சி முகாம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ராணுவ நடவடிக்கையே அல்ல என்று இந்திய வெளியுறவுச் செயலர் கூறியுள்ளார்.

பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து இந்திய ராணுவத்தைச் சேர்ந்த மிராஜ் 2000 போர் விமானங்கள் இன்று நடத்திய பதிலடித் தாக்குதலில் ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத பயிற்சி முகாம்கள் முற்றிலும் தகர்க்கப்பட்டுள்ளது.

இந்திய விமானப் படைக்கு சொந்தமான 12 மிராஜ் போர் விமானங்கள் ஆயிரம் கிலோ எடைகொண்ட வெடிகுண்டுகளை, இந்திய எல்லையோரம்  அமைக்கப்பட்டிருந்த பயங்கரவாத முகாம்கள் மீது சில நொடிகளில் வீசிவிட்டு எந்த சேதமும் இன்றி திரும்பி வந்துள்ளது.

இந்திய எல்லையையொட்டியிருக்கும் பாலகோட், சாகோதி, முஸாபராபாத் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டிருந்த பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் முற்றிலும் தரைமட்டமாக்கித் திரும்பியுள்ளது.

இது குறித்து விளக்கம் அளித்த இந்திய வெளியுறவுச் செயலர் விஜய் கோகலே, பாகிஸ்தான் எல்லையில் இருந்த ஜெ-இ-எம் பயங்கரவாத பயிற்சி முகாம்கள் மீது இந்திய விமானப்படை நடத்திய தாக்குதல் ராணுவ நடவடிக்கையல்ல. 

இந்த தாக்குதலில் ஜெ-இ-எம் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள், பயிற்சி பெற்று வந்த பயங்கரவாதிகள், பயங்கரவாத அமைப்பின் தலைவர்கள் என பலரும் கொல்லப்பட்டனர். 

ஜெ-இ-எம் பயங்கரவாத அமைப்பு இந்தியாவில் மேலும் சில தாக்குதல்களை நடத்த திட்டமிட்டிருந்ததை புலனாய்வு அமைப்புகள் உறுதி செய்ததால் அதனைத் தடுக்கவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த அதிரடித் தாக்குதல் என்பது தவிர்க்க முடியாத ஒன்று என்றும், பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையின் முக்கியம்சமாக இருந்ததாகவும் விஜய் கோகலே தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.