முகப்பு
இந்தியா

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது அறிவிப்பு   

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 

Updated On : 31 ஜனவரி, 2024 at 6:58 AM
பகிர்:

புது தில்லி: முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 

காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவர் பிரணாப் முகர்ஜி. மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி காலத்திலிருந்து மத்திய அமைச்சராகவும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய பொறுப்புகளிலும் இருப்பவர். பின்னர் தொடர்ந்து வந்த ராஜிவ் காந்தி, நரசிம் மராவ் மற்றும் மன்மோகன் சிங் என அனைத்து காங்கிரஸ் அரசுகளிலும் முக்கிய பொறுப்புகளை வகித்து வந்தவர். 

குறிப்பாக தனது அரசியல் வாழக்கையின் கடைசி ஆண்டுகளில் நிதி மற்றும் பாதுகாப்பு என முக்கிய மத்திய அமைச்சரவை பொறுப்புகளைக் கையாண்டவர். 

பின்னர் குடியரசுத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். அந்த பொறுப்பிலும் திறம்பட செயல்பட்டார். 

தற்போது தீவிர அரசியலில் இருந்து விலகி கொல்கத்தாவில் குடும்பத்தினருடன் வசித்துவருகிறார். 

இந்நிலையில் பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இந்த அறிவிப்பினை வெளியிட்டார் .

முழு கட்டுரையைப் படிக்க →