முகப்பு
இந்தியா

ஸீரோவுடன் ஸீரோவைக் கூட்டினால் ஸீரோதான்: கணக்கு வாத்தியார் போல பதில் சொல்லும் முதல்வர்

ஸீரோவுடன் ஸீரோவைக் கூட்டினால் ஸீரோதான் வரும்  என்று கணக்குப் பாடத்தைச் சொல்லியுள்ளார் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்.

Updated On : 31 ஜனவரி, 2024 at 6:58 AM
பகிர்:


நொய்டா: ஸீரோவுடன் ஸீரோவைக் கூட்டினால் ஸீரோதான் வரும்  என்று கணக்குப் பாடத்தைச் சொல்லியுள்ளார் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்.

மக்களவைத் தேர்தல், மோடி, ராகுல் என பழைய பேச்சுக்களுக்கு எல்லாம் ஒரு தற்காலிக முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியில் ஒரு அதிரடி மாற்றம் செய்யப்பட்டது.

அதுதான் உத்தரப்பிரதேச கிழக்குப் பகுதி காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலர் பொறுப்புக்கு பிரியங்கா நியமனம் செய்யப்பட்டது.

இது குறித்து பல்வேறு தலைவர்களும் அவரவர் கருத்துகளை சொல்லிவிட்டனர். தற்போது உத்தரப்பிரதேச முதல்வர் சொல்வது என்னவென்றால், வரும் மக்களவைத் தேர்தலில் பிரியங்காவின் வரவால் எந்த மாற்றமும் ஏற்படாது. ஏன் என்றால் ஸீரோவுடன் ஸீரோவைக் கூட்டினால் ஸீரோதான்.

குடும்ப அரசியல் என்பதுதான் காங்கிரஸ் கட்சியின் பாரம்பரியம் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார்கள் என்று யோகி ஆதித்ய நாத் கூறியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.