இந்தியா

மகாத்மா காந்தி உருவ பொம்மையை துப்பாக்கியால் சுட்டு கொண்டாடிய பெண் சாமியார் தலைமறைவு 

மகாத்மா காந்தி உருவ பொம்மையை துப்பாக்கியால் சுட்டு, தீ வைத்துக் கொண்டாடிய பெண் சாமியார் காவல்துறைக்கு பயந்து தலைமறைவாகியுள்ளார்.

DIN

அலிகார்: மகாத்மா காந்தி உருவ பொம்மையை துப்பாக்கியால் சுட்டு, தீ வைத்துக் கொண்டாடிய பெண் சாமியார் காவல்துறைக்கு பயந்து தலைமறைவாகியுள்ளார்.

தேசப்பிதா மகாத்மா காந்தியின் நினைவு நாள் நாடு முழுவதும் புதனன்று அனுசரிக்கப்பட்டது. அப்போது உத்தரப்பிரதேச மாநிலம் அலிகார் பகுதியில் அமைந்துள்ள ஹிந்து மகா சபா  அலுவலகத்தில் காந்தியின் உருவம் கொண்ட கொடும்பாவி பொம்மை  ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. பொம்மையின் மார்பு பகுதியில் சிவப்பு திரவம் பொருத்தப்பட்டிருந்தது.

பின்னர் ஹிந்து மஹா சபாவின் தலைவர்களில் ஒருவரான பெண் சாமியார் பூஜா ஷகுன் பாண்டே அந்தபொம்மையைத் துப்பாக்கியால் சுட்டார். உடனே அதில் பொருத்தப்பட்டிருந்த சிவப்பு திரவம் ரத்தம் போல் வழிந்து ஓடியது. சுடும்போது அங்கு கூடி இருந்தவர்கள் 'நாதுராம் கோட்சே வாழ்க' என்று இந்தியில் முழக்கமிட்டனர். அதன் பின்னர் அங்கு கூடியிருந்தவர்கள்  உருவ பொம்மை மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து கொளுத்தினார்கள். அத்துடன் கோட்சே உருவ படத்திற்கு மரியாதை செலுத்தினர். பெண் சாமியார் பாண்டே கூடியிருந்தோருக்கு இனிப்புகளையும் வழங்கியுள்ளார் மொத்த நிகழ்வையும் அவர்கள் விடியோவாக எடுத்து வெளியிட்டனர்.

இந்த விடியோவானது சமூக வலைதளங்களில் வேகமாக பரவியவுடன் கடும் கண்டங்கள் எழுந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் 13 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை  தேடி வருகின்றனர்.

தற்போது இவ்விவகாரத்தில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், பெண் சாமியார்  பூஜா ஷகுன் பாண்டே  தலைமறைவாகி விட்டார் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொன்னேரி அருகே அந்தரத்தில் தொங்கிய அரசுப் பேருந்து!

உத்தரகண்ட் மேகவெடிப்பு: 2 பேர் மாயம்! மீட்புப் பணியில் ராணுவம்!

இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தினேன்: மீண்டும் சொன்ன டிரம்ப்! ஆனால் இந்த முறை..

தமிழக முதல்வா் மீண்டும் ஸ்டாலின்தான்: அமைச்சர் கே.என். நேரு திட்டவட்டம்

விஷ்ணு விஷாலின் ஆர்யன் ரிலீஸ் அப்டேட்!

SCROLL FOR NEXT