இந்தியா

மாலை ஆறு மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு: கர்நாடக சபாநாயகருக்கு ஆளுநர் உத்தரவு 

மாலை ஆறு மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி அரசின் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று கர்நாடக சபாநாயகருக்கு மாநில ஆளுநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

DIN

பெங்களூரு: மாலை ஆறு மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி அரசின் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று கர்நாடக சபாநாயகருக்கு மாநில ஆளுநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கர்நாடக சட்டப்பேரவையில் வியாழனன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும் என்று முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது.ஆனால் நேற்று முழுவதும் பாஜகவின் நடவடிக்கையை எதிர்த்து  காங்கிரஸ் மற்றும் மத்சசார்பற்ற ஜனதாதள எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டதால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவில்லை. மாலை ஆறு மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று ஆளுநர் வஜுபாய் வாலா உத்தரவிட்டிருந்தும் நேற்று நடைபெறவில்லை.

இந்நிலையில் வெள்ளி மதியம் 1.30 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ஆளுநர் மீண்டும் உத்தரவிட்டிருந்த நிலையில், கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகர் ரமேஷ்குமார் தலைமையில் வெள்ளி காலை கூடியது.

இரண்டாவது நாளாக நடந்து வரும்  சட்டப்பேரவைக் கூட்டத்தில், முதல்வர் குமாரசாமி உரையாற்றினார். அதைத் தொடர்ந்து தீர்மானத்தின் மீது எம்.எல்.ஏக்கள் பேசி வருகின்றனர். அதனால் மதியம் 01.30 மணி தாண்டியும் வாக்கெடுப்பு நடைபெறவில்லை.  

இந்நிலையில் மாலை ஆறு மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி அரசின் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று கர்நாடக சபாநாயகருக்கு மாநில ஆளுநர் மீண்டும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஆனால் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் சித்தராமையா வெள்ளியன்று வாக்கெடுப்பு நடைபெறாது என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இளையராஜாவுக்கு செப்.13ல் தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா!

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: மாநிலங்களவை துணைத்தலைவர் வாக்களித்தார்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: சோனியா, கார்கே, பிரியங்கா வாக்களித்தனர்

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ராகுல் காந்தி வாக்களித்தார்!

செப். 13-ல் சுற்றுப்பயணம் தொடங்கும் விஜய்! வார இறுதி நாள்களில் மட்டும் பிரசாரம்!

SCROLL FOR NEXT