இந்தியா

அப்படி நடந்துவிட்டால் 24 மணிநேரத்தில் காங்கிரஸில் பிளவு: நட்வர் சிங் எச்சரிக்கை  

அப்படி மட்டும் நடந்துவிட்டால் காங்கிரஸ் கட்சி 24 மணிநேரத்தில் பிளவுபடும் என்று கட்சியின்    மூத்த தலைவர்களில் ஒருவரான நட்வர் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

DIN

புது தில்லி: அப்படி மட்டும் நடந்துவிட்டால் காங்கிரஸ் கட்சி 24 மணிநேரத்தில் பிளவுபடும் என்று கட்சியின்    மூத்த தலைவர்களில் ஒருவரான நட்வர் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் படுதோல்வி அடைந்ததற்குப் பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக ராகுல் காந்தி அறிவித்தார். ஆனால் அதற்கு காங்கிரஸ் கட்சியின் மற்ற தலைவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆனால் ராகுல் தனது முடிவில் உறுதியாக இருந்தார். இதையடுத்து அடுத்த தலைவரைத் தேர்வு செய்யும் வரை ராகுல் தலைமையில் கட்சி இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டது. அதேசமயம் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான நட்வர் சிங் பெயர் தலைவர் பதவிக்கான தேர்வில் அடிபட்டது. ஆனால் பின்னர் அவர் அதனை மறுத்து விட்டார்.

இந்நிலையில் நேரு குடும்பத்தில் இல்லாத ஒருவர் காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றால், காங்கிரஸ் கட்சி 24 மணிநேரத்தில் பிளவுபடும் என்று கட்சியின்    மூத்த தலைவர்களில் ஒருவரான நட்வர் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.  

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:

உத்தரப்பிரதேசத்தின் சோன்பத்ரா சம்பவத்தில் பிரியங்கா காந்தி நடந்து கொண்டதை அறிந்திருப்பீர்கள். அவர் தான் நினைத்ததை சாதித்து விட்டார். நேரு குடும்பத்தில் இருந்து யாரும் தலைவராக வரமாட்டார்கள் என்று ராகுல் அறிவித்துள்ளார். ஆனால் அப்படி வேறு ஒருவர் காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றால், காங்கிரஸ் கட்சி 24 மணிநேரத்தில் பிளவுபடும். தற்போது தலைவர் பதவிக்கு பிரியங்கா காந்தி தகுதியான தேர்வு.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கனமழையால் வெள்ளம்! தண்ணீரில் மிதந்து சென்ற உணவகம்! | Mexico

மருத்துவக் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: 3 பேர் கைது!

கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர்! மரத்தில் மோதி விபத்து! 5 பேர் காயம்! | California

இட்லி கடை வெற்றியா? தோல்வியா?

6 மாவட்டங்களில் போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம்

SCROLL FOR NEXT