இந்தியா

காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவராக சோனியா மீண்டும் தேர்வு

ராஜிநாமா விவகாரத்துக்குப் பிறகு காங்கிரஸ் தலைவர் ராகுல் பங்கேற்கும் முதல் அதிகாரப்பூர்வ கூட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. 

DIN

காங்கிரஸ் கட்சி சார்பில் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட மக்களவை எம்.பி.க்களின் முதல் கூட்டம் தில்லியில் சனிக்கிழமை நடைபெற்றது. 

காங்கிரஸ் கட்சியின் 52 மக்களவை எம்.பி.க்களுடன், மாநிலங்களவை எம்.பி.க்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். எதிர்வரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடருக்கான வியூகங்கள் வகுக்கப்பட்டன. 

கடந்த 25-ஆம் தேதி நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழுவில் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து ராகுல் ராஜிநாமா செய்ய முன்வந்தார். அதன் பிறகு ராகுல் பங்கேற்ற முதல் அதிகாரப்பூர்வ கூட்டம் இதுவாகும்.

இந்தக் கூட்டத்தின்போது, நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவராக சோனியா மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மத்திய அரசால் வஞ்சிக்கப்படும் தமிழகம்: திருச்சி சிவா குற்றச்சாட்டு

முன்னாள் ராணுவத் தளபதி நூலை மேற்கோள்காட்ட அனுமதிக்காதது ஏன்? ராகுல் விளக்கம்

10 மாநிலங்களில் தேடுதல் நடத்தி சைபா் குற்றவாளி கைது-சி.பி.ஐ நடவடிக்கை

மத்திய அரசால் வஞ்சிக்கப்படும் தமிழகம்: மாநிலங்களவையில் திருச்சி சிவா குற்றச்சாட்டு

பெண்ணையாறு விவகாரம்-தீா்வு காண மத்திய அரசு தீா்ப்பாயம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

SCROLL FOR NEXT