இந்தியா

எதிர்க்கட்சி அந்தஸ்தை கோரப்போவதில்லை: காங்கிரஸ்

எதிர்க்கட்சி அந்தஸ்தை கோரப்போவதில்லை என்று ரண்தீப் சுர்ஜேவாலா சனிக்கிழமை தெரிவித்தார். 

DIN

எதிர்க்கட்சி அந்தஸ்தை கோரப்போவதில்லை என்று ரண்தீப் சுர்ஜேவாலா சனிக்கிழமை தெரிவித்தார். இதுதொடர்பாக காங்கிரஸ் எம்.பி.க்களின் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் தலைமை செய்தித்தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா கூறியதாவது:

நாடாளுமன்றத்தில் உள்ள மொத்த எம்.பி.க்களின் எண்ணிக்கையில் 10 சதவீதம் பெற்றிருந்தால் மட்டுமே எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைக்கும். ஆனால், காங்கிரஸ் கட்சி அந்த எண்ணிக்கையில் இருந்து 2 குறைவாக உள்ளது. எனவே முறைப்படி எதிர்க்கட்சி அந்தஸ்து தேவையா, வேண்டாமா என்பதை ஆளும்கட்சி தான் முடிவு செய்ய வேண்டும். 

எனவே எதிர்க்கட்சி அந்தஸ்து பெற தேவையான 54 எம்.பி.க்கள் என்ற எண்ணிக்கை இல்லாத காரணத்தால், காங்கிரஸ் கட்சி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி அந்தஸ்தை கோரப்போவதில்லை என்று தெரிவித்தார்.

மேலும், நாட்டின் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த பிரதமரும், நிதியமைச்சரும் உடனடியாக தலையிட்டு உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.

முன்னதாக, 2014 மக்களவைத் தேர்தலின் போதும் வரலாற்றிலேயே முதன்முறையாக 44 எம்.பி.க்கள் என்ற குறைவான எண்ணிக்கையை காங்கிரஸ் கட்சி பெற்றிருந்தது. இதனால் அதிகாரப்பூர்வ எதிர்கட்சி என்ற அந்தஸ்தை இழந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“அன்னைக்கே உன்ன தட்டிருக்கணும்” மயிலாடுதுறை ஆணவக்கொலை சம்பவம்: பெண்ணின் தாயார் மிரட்டிய விடியோ!

தில்லியில் அமித் ஷாவை சந்தித்த எடப்பாடி பழனிசாமி!

“Feel Good, Comedy Film!” குமாரசம்பவம் படம் பற்றி பிரபலங்கள்!

காஸாவில் பெண்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகளை நினைத்துப்பாருங்கள்! -இஸ்ரேலிடம் ஐ.நா. மனித உரிமைகள் தலைவர்

மீனா பிறந்த நாளில் த்ரிஷ்யம் 3 போஸ்டர்!

SCROLL FOR NEXT